என்னோட ஹீரோவுக்கு வயசு 80... வாழ்த்து சொன்ன இயக்குநர் மோகன் ராஜா

சென்னை : இயக்குநர் மோகன் ராஜா சிறப்பான படங்களை இயக்கி வருகிறார்.

இவரது தந்தை எடிட்டர் மோகனும் சிறப்பான பல படங்களில் பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில் எடிட்டர் மோகன் தனது 80வது பிறந்தநாளை எட்டியுள்ள நிலையில் மோகன் ராஜா அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எடிட்டர் மோகன்

எடிட்டர் மோகன்

எடிட்டர் மோகன் சிறப்பான பல படங்களில் பணிபுரிந்துள்ளார். இவரது மகன்கள் நடிகர் ஜெயம் ரவி மற்றும் இயக்குநர் மோகன் ராஜா. இருவரும் கோலிவுட்டில் வெற்றி நாயகர்களாக வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் தனது தம்பியை வைத்து படம் இயக்கிய மோகன் ராஜா அடுத்த ஹீரோக்களை வைத்தும் படம் இயக்கி வருகிறார்.

தனி ஒருவன் படம்

தனி ஒருவன் படம்

இவரது தனி ஒருவன் படம் சிறப்பான வெற்றியை பெற்றது. இந்நிலையில் தற்போது மலையாள ரீமேக்கான லூசிபரின் தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார். இதில் மெகாஸ்டார் சிரஞ்சீவி நாயகனாக நடித்து வருகிறார். அடுத்ததாக தனி ஒருவன் 2 படத்தையும் இயக்க திட்டமிட்டுள்ளார்.

எடிட்டர் மோகனுக்கு 80 வயது

எடிட்டர் மோகனுக்கு 80 வயது

இந்நிலையில் இவரது தந்தை எடிட்டர் மோகன் தனது 80வது வயதை பூர்த்தி செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு மோகன் ராஜா தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார். தன்னுடைய ஹீரோவிற்கு 80 வயது பூர்த்தி ஆகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தந்தைக்கு வாழ்த்து

தந்தைக்கு வாழ்த்து

தன்னுடைய பிதா குரு தெய்வத்திற்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ள அவர் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும் தன்னுடைய தந்தையுடன் தான் இருக்கும் அழகான புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.

சிறப்பான தயாரிப்பாளர்

சிறப்பான தயாரிப்பாளர்

எடிட்டர் மோகன் 50க்கும் மேற்பட்ட மொழிமாற்று படங்களை தயாரித்துள்ளார். மேலும் நேரடி தமிழ் படங்களையும் தயாரித்துள்ளார். இவர் தனது அனுபவங்களை தனி மனிதன் என்ற பெயரில் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார். இவரது மனைவி வரலட்சுமியும் வேலியற்ற வேதம் என்ற பெயரில் புத்தகத்தை எழுதியுள்ளார்.

திரையுலகினர் வாழ்த்து

திரையுலகினர் வாழ்த்து

தன்னுடைய மகன்கள் இருவரும் சிறப்பான வெற்றியை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளது குறித்து அவர் அவ்வப்போது தனது பேட்டிகளில் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஜெயம் ரவி சிறு வயதிலேயே சினிமாவில் நடித்துள்ளது குறித்தும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் அவர் நேற்றைய தினம் 80வது வயதை எட்டியுள்ளது குறித்து திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X