TVK Maanadu: அப்பப்ப கோபத்தை காட்டிப்பாருங்க அரசியல் மாற்றமே வரும்.. தெறிக்கவிடும் விஜய் வீடியோ!

சென்னை: நடிகர் விஜய் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி அரசியலில் கால் பதிக்கவுள்ளார் என அறிவித்தபோது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர். பலர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் நாளை விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளதை அடுத்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திரைத்துறையைச் சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் தொடங்கி, இயக்குநர்கள் நடிகைகள் என வரிசையாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தளபதி விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். தனது ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தினை அரசியல் கட்சியாக மாற்றி அறிவித்தார். தனது கட்சி அறிவிப்பையே சமூக வலைதளப் பக்கத்தில் அவர் தெரிவித்திருந்தார். தொடர்ந்து சமூக வலைதளப்பக்கத்திலேயே அறிக்கைகளை வெளியிட்டு வந்தார். இதனால் இவரை பலரும் விமர்சித்தனர்.

tvk maanadu vijay

இப்படியான நிலையில் தனது கட்சியின் முதல் மாநாடு குறித்து அதிரடியாக தெரிவித்தார். நாளை அதாவது அக்டோபர் 27ஆம் தேதி தனது கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ள நிலையில் தினமும் தொண்டர்களுக்கு கடிதங்கள் எழுதி வருகின்றார். இணையத்தில் நுழைந்தாலே தவெக மாநாடு குறித்த செய்திகள்தான் குவிந்த வண்ணம் உள்ளது.

tvk maanadu vijay

மாநாடு: குறிப்பாக மாநாட்டு முகப்பு அமைக்கப்பட்டுள்ள விதம், மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள கட் - அவுட்கள், மாநாட்டிற்கான ஏற்பாடுகள், மாநாடு நடைபெறும் இடத்தில் ஏற்றப்படவுள்ள 100 அடி கொடிக்கம்பம் என அனைத்தும் பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகின்றது. இதுமட்டும் இல்லாமல், மருத்துவ முகாம்கள், சிசிடிவி கேமராக்கள், 120 ஏக்கரில் பார்க்கிங் வசதிகள் என ஏற்பாடுகள் அனைத்தும் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது.

tvk maanadu vijay

திரைத்துறை: இந்நிலையில் திரைத்துறையில் இருந்து பலரும் விஜய்க்கு சிறப்பான வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக வெங்கட் பிரபு நேற்று சிறப்பு வீடியோ ரிலீஸ் செய்து வாழ்த்து தெரிவித்திருந்தார். நடிகர் விஷால் மாநாட்டில் கட்டாயம் தான் கலந்து கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார். நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி பேசும்போது, சினிமாவின் உச்சத்தில் இருக்கும்போது சினிமாவை உதறவிட்டு அரசியலுக்கு வருகின்றேன் எனச் சொல்ல ஒரு தைரியம் வேண்டும் என கூறியிருந்தார்.

tvk maanadu vijay

வீடியோ: இந்நிலையில் விஜய்யை வைத்து வேலாயுதம் படத்தை இயக்கிய இயக்குநர் மோகர் ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் சிறப்பு வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், வேலாயுதம் படத்தில் விஜய் பேசும் வசனமான, " 5 வருசத்துக்கு ஒருமுறை கோபத்தை காட்டினால் ஆட்சி மாற்றம் வருதுல, அப்பப்ப காட்டிப்பாருங்க அரசியல் மாற்றமே வரும்" எனப் பேசும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

வாழ்த்து: மேலும் அந்த வீடியோவோடு, இயக்குநர் மோகன் ராஜா விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது, " வேலாயுதம் ரிலீஸ் ஆகி 13 ஆண்டுகள் ஆன தினத்தில் இதைச் சொல்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். நாளை நீங்கள் அமைக்கப்போகும் அடித்தளம் எதிர்காலத்தில் சிறந்த அரசியல் மரபுகளுக்கு வழிவகுக்கட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

tvk maanadu vijay

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X