twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஊழலை ஒழிப்பேன்னு சினிமாவை சேர்ந்த யார் சொன்னாலும் நம்பாதீங்க: இயக்குனர் ட்வீட்டால் சர்ச்சை

    By Siva
    |

    சென்னை: ஊழலை ஒழிப்பேன் என்று சினிமாவை சேர்ந்த யார் சொன்னாலும் நம்பாதீங்க என்று இயக்குனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நான் முதல்வரானால் ஊழலை ஒழிப்பேன் என்று விஜய் கூறினார். ஊழலை முற்றிலுமாக ஒழிப்பது கடினம் தான் என்றாலும் அதை ஒழித்தே ஆக வேண்டும் என்றார்.

    இந்நிலையில் பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குனர் மோகன் போட்டுள்ள ட்வீட் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    சினிமா

    ஊழலை ஒழிப்பேன் அப்படின்னு சினிமாவை சார்ந்த யார் சொன்னாலும் நம்பாதீங்க.. நான் உட்பட.. லஞ்சம் கொடுத்து ஊழல் செய்யாம படத்திற்கு வரிச்சலுகை வாங்க முடியாது இங்க.. அரசாங்கமும் அதிக வரி சினிமாவிற்கு விதிப்பதால் இந்த ஊழலை தெரிந்தே செய்ய வேண்டிய நிலை எங்களுக்கு என்று ட்வீட்டியுள்ளார் மோகன்.

    கோபம்

    மோகனின் ட்வீட்டை பார்த்த தளபதி ரசிகர் ஒருவர் கோபம் அடைந்து, நீ அஜித் ரசிகர் அதனால் உனக்கு காண்டாகத் தான் செய்யும். இதுவே அஜித் சொல்லியிருந்தால் பேசியிருப்பியா என்று கேட்டார்.

    பைக்

    தல வேகமா வண்டி ஓட்றாங்க ... ரசிகர்களும் வேகமா ஓட்டுங்கன்னு யாராவது சொல்லி பார்த்து இருக்கீங்களா..என்று விஜய் ரசிகருக்கு மோகன் பதில் அளித்துள்ளார்.

    பேச்சு

    நான் விஜய்யை பற்றி பேசவில்லை. அவரின் பேச்சு அருமையாக இருந்தது என்று கூறியுள்ளார் மோகன். இருப்பினும் அவர் விளக்கத்தை ஏற்க விஜய் ரசிகர்கள் தயாராக இல்லை.

    English summary
    Pazhaya Vannarapettai director Mohan tweeted asking people not to believe any film industry celebs talking about erasing corruption from the system.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X