வோர்ல்டு டூர் போனேன்.. இப்ப இன்னாங்குற.. புரூஃப் வேணுமா போராளி.. நெட்டிசனை வெறுப்பேற்றிய இயக்குநர்!

சென்னை: ஒருமையில் தன்னிடம் கேள்வி கேட்ட நெட்டிசனுக்கு திரௌபதி இயக்குநர் மோகன் நக்கலாக பதிலாக அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

திரௌபதி சாதி படமா? | RENIGUNDA NISHANTH INTERVIEW | V-CONNECT |FILMIBEAT TAMIL

கடந்த வெள்ளிக்கிழமை முதல் சினிமா துறையிலும் சரி சினிமா ரசிகர்கள் மத்தியிலும் சரி திரௌபதி படம் குறித்துதான் பேச்சாக உள்ளது. ட்ரெயிலர் வெளியானதுமே சூட்டை கிளப்பியது திரௌபதி.

இரு சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து பேசுவதால் இந்த படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என எதிர்ப்புகள் எழுந்தது. ஆனாலும் பல தடைகளை தாண்டி திரௌபதி படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது.

பெரும் சாதனை

பெரும் சாதனை

படத்திற்கு எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வசூலை குவித்து பாக்ஸ் ஆபிஸிலம் படம் டாப்பில் உள்ளது. இதனால் படக்குழு பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. 50 லட்சம் ரூபாய் செலவு செய்த நிலையில் 5 கோடிக்கு மேல் படம் வசூலித்திருப்பது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

ஜெயித்துவிட்டு பதில்

ஜெயித்துவிட்டு பதில்

படத்திற்கு பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இமனால் படக்குழு செம ஜாலி மூடில் உள்ளது. படத்தின் ட்ரெயிலரை பார்த்து திட்டி தீர்த்தவர்கள் விமர்சித்தவர்களுக்கு எல்லாம் ஜெயித்து விட்டு பதில் கூறி வருகிறார் படத்தின் இயக்குநரான மோகன்.

கிழிஞ்ச பாராசூட்

கிழிஞ்ச பாராசூட்

திரௌபதி படத்தை குப்பை என்று கூறிய இயக்குநர் நவீன் முகமது அலியை வாண்ட்டடாக வம்பிழுத்து தக்க பதிலடி கொடுத்துள்ளார் இயக்குநர் மோகன். கிழிஞ்ச பாராசூட்ல பறக்காதிங்க பாத்து கவனமா இருந்துக்குங்க என டிவிட்டரில் பதில் கொடுத்தார். அவரது இந்த டிவிட்டை ரசிகர்கள் பலரும் லைக் செய்திருப்பதோடு ரீடிவிட்டும் செய்து வருகின்றனர்.

திரௌபதியாக வாழ

இந்நிலையில் இயக்குநர் மோகன் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக டிவிட்டியிருந்தார். அதாவது பெண்களே... உங்களை நீங்கள் காத்துக்கொள்ள தயாராகாத வரை இந்த மாதிரி மிரட்டல்கள் தொடரும்.. ஆனால் முடிவு இப்படி இருக்க கூடாது.. #திரெளபதியாக வாழ பழகி கொள்... என்று பதிவிட்டு பத்திரிக்கை செய்தி ஒன்றை மேற்கோள் காட்டியிருந்தார்.

வோர்ல்டு டூல்ர போனேன்

இயக்குநர் மோகனின் இந்த டிவிட்டை பார்த்த நெட்டிசன் ஒருவர், பொள்ளாச்சி சம்பவம் அப்ப எங்க போன என ஒருமையில் கேட்டிருந்தார். அதனை பார்த்த இயக்குநர் மோகன் செம நக்கலாக பதில் கொடுத்திருக்கிறார். அதாவது வோர்ல்டு டூர் போனேன்.. இப்ப இன்னாங்குற... புரூஃப்க்கு பாஸ்போர்ட் காப்பி வேணுமா போராளி.. என கேட்டு வெறுப்பேற்றியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X