twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உன்னை மாதிரி சமூக எதிரிகளை அடக்கம் பண்ணிட்டு தான் போவேன்.. எல்லை மீறியவரிடம் கொந்தளித்த இயக்குநர்!

    |

    சென்னை: தரக்குறைவாக பேசிய நெட்டிசனிடம் கொந்தளித்திருக்கிறார் பிரபல இயக்குநர்.

    நாடகக் காதலை மையப்படுத்தி அண்மையில் வெளிவந்த திரைப்படம் திரௌபதி. 50 லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 10 நாட்களில் 15 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்தது.

    பல்வேறு சமூகத்தினரும் இந்தப் படத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். குடும்பம் குடும்பமாக சென்று பார்த்ததால் தியேட்டர்கள் களைகட்டின.

    தரக்குறைவாக

    தரக்குறைவாக

    அதே நேரத்தில் இப்படத்திற்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படத்தை வண்ணாரப் பேட்டை படத்தின் இயக்குநர் மோகன் ஜி இயக்கியிருந்தார். படத்தின் ட்ரெயிலர் வெளியான நாளில் இருந்தே ஆதரவும் எதிர்ப்பும் ஒன்றாக கிளம்பியது. இதனால் சமூக வலைதளங்களில் இயக்குநர் மோகன் ஜியை சில நெட்டிசன்கள் தரக்குறைவாக பேசி வருகின்றனர்.

    சேது மரணம்

    சேது மரணம்

    மோகன் ஜி பொதுவாக ஏதாவது பேசினாலும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும் மருத்துவருமான சேதுராமன் நேற்று முன்தினம் மாரடைப்பால் அகால மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு பலரும் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியுடன் இரங்கல் தெரிவித்தனர்.

    நம்ப முடியவில்லை

    நம்ப முடியவில்லை

    அந்த வகையில் இயக்குநர் மோகன் ஜியும் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தார். இதுதொடர்பான பதிவில் இயற்கை பல பாடங்களை கற்பித்துக் கொண்டு இருக்கிறது நமக்கு.. இன்னும் நம்பமுடியவில்லை.. என குறிப்பிட்டிருந்தார். இதற்கு பலரும் ஆதரவாக கருத்து பதிவிட்டனர். அந்த வகையில் இயக்குநர் மோகன் ஜியும் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தார். இதுதொடர்பான பதிவில் இயற்கை பல பாடங்களை கற்பித்துக் கொண்டு இருக்கிறது நமக்கு.. இன்னும் நம்பமுடியவில்லை.. என குறிப்பிட்டிருந்தார். இதற்கு பலரும் ஆதரவாக கருத்து பதிவிட்டனர்.

    அவரும் 1985..

    ஆனால் சில நெட்டிசன்கள் அதனையும் கடுமையாக விமர்சித்தனர். ஒரு நெட்டிசன், அந்த மனுசனும் 1985 நீயும் 1985 வருசம் சீக்கிரம் நல்ல செய்தி எதிர் பாக்கலாம் என்று கூறினார். இதனை பார்த்து கொதித்து போன இயக்குநர் மோகன், உன்னை மாதிரி சமூக எதிரிகளை அடக்கம் பண்ணிட்டு தான் போவேன்.. அடுத்த சம்பவம் தரமா வருவதற்கு உன்ன மாதிரி ஆளுங்களோட ட்வீட் தான் காரணமா இருக்க போகுது.. இன்னும் கதறுங்க.. என பதிவிட்டுள்ளார்.

    சிஸ்டம்ல பிரச்சனை

    இதேபோல் மற்றொரு நெட்டிசன், ஆமா ஆமா நம்ப முடியல தான் நீ லாம் உசுரோட இருக்கியே!!? என்று கேட்டுள்ளார். அதற்கும் அசராமல் பதில் கூறியிருக்கிறார். அதாவது பெயரில் இருக்கும் ஆரோக்கியம் குணத்தில் இல்லை.. படத்தை பார்த்த அப்பறம் இவ்வளவு வன்மமாக இருக்கீங்கனா உங்க சிஸ்டம்ல ஏதோ பிரச்சினை இருக்கு.. இனி ஆட முடியாது ஆரோக்யம்.. அடக்கிடுவாங்க.. திருந்துங்க.. என பதிவிட்டுள்ளார்.

    நாங்க பாத்துக்குறோம்

    இயக்குநர் மோகனின் இந்த டிவிட்டுக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மோகனின் டிவிட்டை பார்த்த இவர், இவனுங்களுக்கு எல்லாம் பதிலளிக்க வேண்டாம் சகோ... நீங்கள் இன்னும் அதிகமா கதற விடும் வேலையில கான்சென்ட்ரேட் பண்ணுங்க சகோ.. இவனுங்கள நாங்க பாத்துக்கறோம் என்று கூறியிருக்கிறார்.

    English summary
    Director Mohan tensed because of netizens criticize. Some Netizens are going to much in social media against Mohan G.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X