பெற்றோர்களின் பேராதரவோடு மிரட்டுவாள்.. திரௌபதி டீம் செம ஹேப்பி.. இயக்குநர் டிவிட்ட பாருங்க!
சென்னை: திரௌபதி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இயக்குநர் மோகன் படம் குறித்து டிவிட்டியிருக்கிறார்.
மோகன் இயக்கத்தில் நேற்று வெளியான படம் திரௌபதி. ரிச்சர் ரிஷி, ஷீலா ஆகியோர் லீடிங் ரோலில் நடித்திருந்தனர்.
இந்தப் படம் நாடகக்காதல் உள்ளிட்ட இரு சமூகம் சார்ந்த பிரச்சனைகளை எடுத்துக் கூறும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.

நிரம்பி வழியும் தியேட்டர்
திரௌபதி படத்திற்கு ஒரு சில குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். அவர்கள் குடும்பம் குடும்பமாக சென்று படத்தை பார்த்து வருகின்றனர். குறிப்பாக வட மாவட்டங்களில் திரௌபதி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. திரௌபதி படம் ஓடும் தியேட்டர்கள் நேற்று முதல் நிரம்பி வழிகிறது.

ஹவுஸ் ஃபுல்
படம் ரிலீஸான தியேட்டர்களும் திருவிழாக் கோலம் பூண்டது. இந்நிலையில் முதல் நாளான நேற்று மட்டும் ஒரு கோடி ரூபாய் வசூல் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இரண்டாம் நாளான இன்றும் திரௌபதி ஓடும் தியேட்டர்கள் ஹவுஸ் ஃபுல்லாகி உள்ளது.
மிரட்டுவாள்
படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் படக்குழு பெரும் மகிழ்ச்சியில் உள்ளது. இந்நிலையில் இயக்குநர் மோகன் படம் பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட்டியிருக்கிறார். அவர் தெரிவித்திருப்பதாவது, பெற்றோர்களின் பேராதரவோடு மிரட்டுவாள் #திரெளபதி #Draupathi.. மிகப்பெரிய வரவேற்பு.. முதல் நாள் திரையரங்கு சென்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் என பதிவிட்டுள்ளார்.
ஆதரவுக்கு நன்றி
மேலும் தமிழக அரசுக்கும், தமிழக காவல்துறைக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும், மேலாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், எங்களை ஆதரித்த மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என்றும் பதிவிட்டுள்ளார். அதோடு படத்தை பாராட்டியவர்களுக்கும் நன்றி கூறியிருக்கிறார் இயக்குநர் மோகன்.


Click it and Unblock the Notifications











