செம த்ரில்லிங்கா இருக்கு..யாரும் எதிர்பார்க்காத கிளைமாக்ஸ்.. கண்ணை நம்பாதே மக்கள் கருத்து!

சென்னை : இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய மு மாறனின் இயக்கத்தில் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ள படம் கண்ணை நம்பாதே.

இப்படத்தில், ஆத்மிகா, பூமிகா சாவ்லா, பிரசன்னா, சதீஷ், சுபிக்ஷா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பேனரில் வெளியாகி உள்ள இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். ஸ்ரீதர் கூடுதல் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார்.

கண்ணை நம்பாதே

கண்ணை நம்பாதே

தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் உதயநிதி, பிரசன்னாவுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். ஒரு நாள் இரவு பூமிகாவின் கார் விபத்தில் சிக்கி விடுகிறது. இந்த விபத்தை பார்த்த உதயநிதி, பூமிகாவை பத்திரமாக மீட்டு அவரது இல்லத்தில் விட்டுவிட்டு வீடு திரும்புகிறார். ஆனால், மறுநாள் பூமிகா அவரின் காரிலேயே, பிணமாக இருக்கிறார். பூமிகாவை கொன்றது யார்? கொலைக்காக காரணம் என்ன என்பதை க்ரைம் திரில்லர் பாணியில் மிகவும் சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர். இத்திரைப்படத்தை முதல் நாள் முதல் ஷோவில் படம் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாமா?

கண்ணை நம்பாதே

கண்ணை நம்பாதே

இயக்குநர் மாறனின் இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படம், ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும், அதேபோலத்தான் இந்த படமும் சுவாரஸ்யமா இருக்கு. இந்த படத்தில், உதயநிதி,பிரசன்னா நல்லா நடிச்சு இருக்காங்க, உதயநிதியின் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல், மற்றவர்களுக்கும் இந்த படம் நிச்சயம் பிடிக்கும், ஆனால், அவர் மாமன்னன் படத்தோட கடைசி என கூறியுள்ளது தான் சற்று வருத்தமாக இருக்கு என்று படம் பார்த்த ரசிகர் ஒருவர் கூறியுள்ளார்.

எதிர்பார்க்காத கிளைமாக்ஸ்

எதிர்பார்க்காத கிளைமாக்ஸ்

படம் ஆரம்பத்தில் இருந்து கிளைமாக்ஸ் வரை ரொம்ப த்ரில்லிங்காக இருந்தது. இதே மாதிரி கதையை நாம நிறைய பார்த்து இருப்போம் இருந்தாலும், கிளைமாக்ஸ் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது. படத்தின் மைனஸ் என்று எதையுமே சொல்ல முடியாத இளவுக்கு, ஆரம்பம் முதல் இறுதி வரை நன்றாக இருந்தது, ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி என்றார் ஒரு பெண் ரசிகை.

தலைப்பே சூப்பர்

தலைப்பே சூப்பர்

இரவுக்கு ஆயிரம் படத்தில் ஒரு நைட்டில் நடக்கும் விஷயத்தை த்ரில்லிங்காக சொல்லி இருப்பார் இயக்குநர். ஆனால், இந்த படத்திற்கு கண்ணை நம்பாதே என பெயர்வைத்த தலைப்பிலேயே ஆர்வத்தை தூண்டி இருக்கிறார். உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி, கலகத்தலைவன் திரைப்படங்கள் எனக்கு ரொம்பபிடிக்கும். ஆனால், இந்த படம் வேறு ஒரு ஜனரில் இருக்கிறது. ஆனால், உதயநிதி மாமன்னன் படத்தோட நடிப்பது கடைசி என கூறியிருப்பது, வருத்தமாக இருந்து, அவர் தொடர்ந்து படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம் என்று படம் பார்த்த ரசிகர்கள் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X