பிரபுதேவாவின் டெடிகேஷன்... புல்லரித்த பொன் மாணிக்கவேல் இயக்குநர்!

சென்னை : நடிகர் பிரபுதேவாவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் பொன் மாணிக்கவேல். படத்தில் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார் பிரபுதேவா.

இந்தப் படத்தை இயக்கியுள்ளார் ஏசி முகில். படம் வரும் 19ம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் பிரபுதேவாவின் டெடிகேஷன் குறித்து முகில் மனம் திறந்துள்ளார்.

பொன் மாணிக்கவேல் படம்

பொன் மாணிக்கவேல் படம்

நடிகர் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் பொன் மாணிக்கவேல். படத்தில் முக்கிய வேடத்தில் மறைந்த இயக்குநர் மகேந்திரன் நடித்துள்ளார். படத்தை இயக்கியுள்ளார் ஏசி முகில். படத்தில் காவ்லதுறை உதவி ஆணையராக நடித்துள்ளார் பிரபுதேவா.

ஓடிடியில் ரிலீஸ்

ஓடிடியில் ரிலீஸ்

தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேலின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் வரும் 19ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பான உதிரா பாடல்

சிறப்பான உதிரா பாடல்

படத்தின் உதிரா உதிரா பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் பாடலில் பிரபுதேவா மற்றும் நிவேதா பெத்துராஜின் கெமிஸ்ட்ரி மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. மேலும் பாடலும் சிறப்பான வகையில் படமாக்கப்பட்டுள்ளது.

பிரபுதேவா டெடிகேஷன்

பிரபுதேவா டெடிகேஷன்

இந்நிலையில் இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் பிரபுதேவாவின் டெடிகேஷன் குறித்து தற்போது படத்தின் இயக்குநர் முகில் மனம் திறந்துள்ளார். க்ளைமாக்ஸ் காட்சியில் தொடர்ந்து 36 மணிநேரம் அவர் சாப்பிடக் கூட நேரமில்லாமல் நடித்து கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

36 மணிநேரம் நடிப்பு

36 மணிநேரம் நடிப்பு

படத்தின் படப்பிடிப்பை இரண்டு நாட்களில் முடிப்பதாக தீர்மானிக்கப்பட்ட நிலையில் வேறொரு படத்தின் சூட்டிங்கிற்காக பிரபுதேவா மொரீசியல் செல்ல வேண்டியிருந்ததால் தொடர்ந்து 36 மணிநேரங்கள் இரவு பகலாக நடித்து சூட்டிங்கை முடித்துக் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

டைரக்டர் பெருமிதம்

டைரக்டர் பெருமிதம்

அதன்பிறகே அவர் வெளிநாடு புறப்பட்டு சென்றதாகவும் முகில் குறிப்பிட்டுள்ளார். தயாரிப்பாளர் செட் செல்லாம் போட்டு செலவு செய்திருந்த நிலையில், அவரது பிரச்சினைகளை கருத்தில் கொண்டு பிரபுதேவா இத்தகைய டெடிகேஷனை வெளிப்படுத்தியது குறித்து முகில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X