தர்பார்.. என்னாச்சு.. ரஜினி ரசிகர்களை ஏ.ஆர். முருகதாஸ் ஏமாத்திட்டாரா.. வலுக்கும் அதிருப்தி

Recommended Video

Darbar Public Opinion | Darbar Audience Review | Rajini | Nayanthara | Anirudh

சென்னை: தர்பார் படத்தில் நடிகர் ரஜினிகாந்தை இயக்குநர் ஏஆர் முருகதாஸ் சரியாக கையாளவில்லை என்று முனுமுனுப்புகள் கிளம்பியுள்ளன.

பல மாஸ் ஹீரோக்களை வைத்து மாஸ் படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஏஆர் முருகதாஸ். அவரது இயக்கத்தில் வெளியான தீனா, ரமணா, கஜினி, கத்தி, துப்பாக்கி, சர்க்கார் உள்ளிட்ட படங்கள் செம ஹிட். ஏன் விஜயகாந்த்தை வைத்து கொடுத்த ரமணா மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படம்.

பாக்ஸ் ஆபிஸுக்கு கேரண்டி கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் ஏஆர் முருகதாஸ். நமக்கான கதையை தயார் செய்யமாட்டாரா? எப்போது இவரது இயக்கத்தில் நடிப்போம் என காத்திருக்கின்றனர் பாலிவுட் நடிகர்கள். சிரஞ்சீவியை வைத்தும் கூட மாபெரும் ஹிட்டடித்தார். (ரமணா ரீமேக்)

எதிர்பார்த்த அளவுக்கு இல்லை

எதிர்பார்த்த அளவுக்கு இல்லை

அந்தளவுக்கு தரமான இயக்குநர் ஏஆர் முருகதாஸ். இவர் முதல் முறையாக நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்கியுள்ள படம் தர்பார். இன்று உலகம் முழுக்க ரிலீஸ் ஆகியுள்ள இந்த படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் ஜென்ரல் ஆடியன்ஸ் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என தெரிவித்து வருகின்றனர்.

ரஜினியே சுமந்திருக்கிறார்

ரஜினியே சுமந்திருக்கிறார்

போலீஸ் கமிஷனராக நடித்துள்ள ரஜினிகாந்த், தனது வேலையை அவ்வளவு அழகாகவும் சிறப்பாகவும் செய்திருக்கிறார். இரண்டரை மணி நேரத்தையும் தாண்டி செல்லும் தர்பாரை ஒற்றை மனிதராக சுமந்திருக்கிறார் ரஜினி.

கலக்கியிருக்கிறார்

கலக்கியிருக்கிறார்

இதற்கு முன்பு வெளிவந்த படங்களை காட்டிலும் செம அழகாக இருக்கிறார் ரஜினிகாந்த். ஆக்ஷன், ரொமான்ஸ், கிண்டல் கேலி என்று கலக்கியிருக்கிறார்.
ரஜினியிடம் ரசிகர்கள் எதிர்பார்த்ததைவிடவும் அவர் அதிகமாகவே கொடுத்து இருக்கிறார். ஆனால் முருகதாஸ் படம் என்று எதிர்பார்க்கப்பட்ட விஷயங்கள் எல்லாமே மிஸ்ஸிங்.

தவற விட்டுவிட்டார்

தவற விட்டுவிட்டார்

பல இடங்களில் லாஜிக் மிஸ்ஸிங், தேவையில்லாத பாடல், நல்ல கதை இருந்தப் போதும் மோசமான ஸ்க்ரீன்ப்ளே இல்லை என்று சொல்கிறார்கள் படம் பார்த்தவர்கள். தமிழ் சினிமாவின் உச்ச நடிகரை, உலகம் முழுக்க ரசிகர்களை கையில் வைத்துள்ள ஒரு நடிகரை எப்படிக் காட்ட வேண்டுமோ அது சரியாக வரவில்லை என்றும் சொல்கிறார்கள்.

வீணாக்கி விட்டார்

வீணாக்கி விட்டார்

ரஜினிக்கு அடுத்தப்படியாக படத்தில் நடித்திருப்பவர் என்றால் நிவேதா தாமஸ்தான். வில்லன் கதாப்பாத்திரத்தைக் கூட வீணாக்கி விட்டார் இயக்குநர் என்கிறார்கள். ஏற்கனவே கஜினி படத்தில் தான் நடித்ததுதான் பெரிய தவறு என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா. தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே நடிக்கும் நயன், இந்தப் படத்திலும் சும்மாவே வந்து செல்கிறார். நடிப்பதற்கு பெரிதாக வேலையில்லை.

சந்தோஷ் சிவன் கேமரா

சந்தோஷ் சிவன் கேமரா

அனிருத்தின் இசை ரஜினியின் வேகத்திற்கு ஈடு கொடுத்திருக்கிறது. உண்மையில் ரஜினிக்கு அடுத்து அனிருத்தான் இப்படத்தின் ஹீரோவாக இருக்கிறார் என்று சொல்கிறார்கள். இசையில் குறை சொல்ல ஒன்றும் இல்லை. அசத்தியிருக்கிறார் அனிருத். இதேபோல் சந்தோஷ் சிவனின் கேமராவும் மாஸ் காட்சிகளுக்கு ஏற்ப சுற்றி சுற்றி காட்சியாக்கியிருக்கிறது.

கோட்டைவிட்ட இயக்குநர்

கோட்டைவிட்ட இயக்குநர்

இயக்குநர் ஸ்க்ரீன் ப்ளேவில் கோட்டைவிட்டதால் பல இடங்களில் லாஜிக் மிஸ்ஸிங். முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை.
அங்கங்கு சசிகலாவின் ஷாப்பிங் போன்ற சில டயலாக்குகள், சண்டைக்காட்சிகள், நயன்தாரா ரஜினி ரொமான்ஸ் என செய்து முடித்திருக்கிறார் முருகதாஸ். ரஜினி என்ற மாஸ் நடிகர் கையில் இருந்தும் கூட வலுவில்லாத திரைக்கதையால் படம் தத்தளிப்பதாக சொல்கிறார்கள் படத்தைப் பார்த்தவர்கள்.

சரக்கு தீர்ந்துவிட்டதா?

சரக்கு தீர்ந்துவிட்டதா?

என்னாச்சு முருகதாஸுக்கு.. வலுவான படங்களைக் கொடுத்த அவரால் ஏன் ரஜினி என்ற மிகப் பெரிய சூப்பர் ஸ்டாரை வைத்து கொண்டு அதகளம் செய்ய முடியாமல் போனது என்றும் கேட்கிறார்கள்., இருப்பினும், ரஜினிக்காக படத்தைப் பார்க்க ஒரு குரூப் கிளம்பிக் கொண்டேதான் இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X