ஸ்டோர் ரூம் மெமரீஸ்... இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட டைரக்டர் ஏஆர் முருகதாஸ்
சென்னை : இயக்குநர் ஏஆர் முருகதாஸ் தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் ஏதும் இன்றி வீட்டில் முடங்கியுள்ளார்.
Recommended Video
சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இவர் இயக்கிய தர்பார் படம் வெளிவந்தது.
இந்நிலையில் தான் உதவி இயக்குநராக இருந்தபோது நடித்த ஒரு படத்தின் காட்சியை ஸ்டோர் ரூம் மெமரீஸ் என்ற பெயரில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

சமூக விழிப்புணர்வு படங்கள்
தமிழின் முன்னணி இயக்குநராக உள்ள ஏஆர் முருகதாஸ் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் திரைப்படங்களை கொடுத்து வருகிறார். தமிழில் விஜய் நடிப்பில் கத்தி, துப்பாக்கி, சர்க்கார் ஆகிய படங்களையும் ரமணா, 7ம் அறிவு, கஜினி உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களையும் அவர் இயக்கியுள்ளார்.

கேமியோ ரோல்கள்
தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ஸ்பைடர் என்ற படத்தை கொடுத்துள்ளார். இதில் எஸ்ஜே சூர்யாவின் கேரக்டர் பேசப்பட்டது. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை வைத்து தர்பார் படத்தை கொடுத்துள்ளார். தன்னுடைய இயக்கத்தில் ஒருசில சிறிய கேரக்டர்களில் அவர் வருவதுண்டு.

இன்ஸ்டாவில் வெளியீடு
இந்நிலையில் தான் உதவி இயக்குநராக இருந்தபோது தான் நடித்த கேமியோ கேரக்டரின் படக்காட்சியை ஸ்டோர் ரூம் மெமரீஸ் என்ற பெயரில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். கடந்த 1997ல் அப்பாஸ், சிம்ரன் நடிப்பில் வெளிவந்த பூச்சூடவா படத்தின் காட்சிதான் அது.

சிம்ரனை வெறுப்பேற்றும் நாகேஷ்
அதில் காபி கொடுக்கும் பையனாக வரும் முருகதாசை, அப்பாசின் நினைவை சிம்ரனுக்கு ஏற்படுத்தும்வகையில் கண்ணா, கண்ணா என்று அழைக்கிறார் நாகேஷ். தொடர்ந்து அவர் வெளியேறும் நேரத்தில் உன்னுடைய பெயர் என்ன என்று நாகேஷ் கேட்க முருகதாஸ் என்று அவர் கூறுகிறார்.

ரசிகர்களிடம் பகிர்வு
தன்னுடைய மலரும் நினைவுகளை எழுப்பிய இந்த வீடியோவை அவர் தற்போது ரசிகர்களிடமும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர் காபி பாய்க்கான உடல்கட்டுடன் உள்ளது மேலும் சிறப்பை சேர்த்துள்ளது. மேலும் நாகேஷின் நகைச்சுவையும் அருமையாக உள்ளது.


Click it and Unblock the Notifications











