Director Muthaiah: மகனை ஹீரோவாக்கும் இயக்குநர் முத்தையா.. மதுரையில் துவங்கியது சூட்டிங்!
சென்னை: சசிகுமார் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டில் வெளியானது குட்டி புலி இந்த படம் மூலம் சினிமாவில் இயக்குனராக என்ட்ரி கொடுத்திருந்தார் முத்தையா. தொடர்ந்து தேவராட்டம், கொடிவீரன், கொம்பன், விருமன், புலிகுத்தி பாண்டி, காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார். ஆர்யா, விஷால், கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களை இயக்கியுள்ள முத்தையா, அடுத்ததாக எந்த நடிகருடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்பட்டது. இந்நிலையில் தன்னுடைய மகன் விஜய் முத்தையாவை லீட் கேரக்டரில் வைத்து அடுத்த படத்தை இயக்கவுள்ளார் முத்தையா.
கிராமத்து கதைக்களத்திலேயே அடுத்தடுத்த படங்களை கொடுத்துவருகிறார் முத்தையா. கார்த்தி, அதிதி ஷங்கர் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான விருமன் படத்தை இவர் கடைசியாக இயக்கியிருந்தார். இந்நிலையில் தன்னுடைய மகனை தற்போது ஹீரோவாக களமிறக்கியுள்ளார். மதுரையை சுற்றிய கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகவுள்ளது. படத்தின் சூட்டிங் இன்றைய தினம் துவங்கவுள்ள நிலையில் சூட்டிங்கை ஒரே கட்டமாக எடுக்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முற்றிலும் புதுமுகங்களை இந்தப் படத்தில் அவர் கமிட் செய்துள்ளார்,

இயக்குநர் முத்தையா: கடந்த 2013 ஆம் ஆண்டில் சசிகுமார் நடிப்பில் வெளியான குட்டி புலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக என்ட்ரி கொடுத்தவர் இயக்குநர் முத்தையா. கடந்த 11 ஆண்டுகளில் கார்த்தி நடிப்பில் கொம்பன் மற்றும் விருமன் ஆகிய படங்களையும் விஷால் நடிப்பில் மருது, சசிகுமார் நடிப்பில் கொடிவீரன், கௌதம் கார்த்திக் நடித்த தேவராட்டம் மற்றும் விக்ரம் பிரபு நடிப்பில் புலிக்குத்தி பாண்டி, ஆர்யா நடிப்பில் காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் படங்களையும் இவர் இயக்கியுள்ளார். கிராமத்து கதைக்களத்தை மையமாக வைத்து இவரது படங்கள் இயக்கப்பட்டு வரும் சூழலில் அடுத்ததாக இந்த நடிகருடன் முத்தையா இணைவார் என்ற எதிர்பார்ப்பு கோலிவுட்டில் காணப்பட்டது.
மகனை ஹீரோவாக்கும் முத்தையா: இந்நிலையில் தன்னுடைய அடுத்த படத்தில் தன்னுடைய மகன் விஜய் முத்தையாவை ஹீரோவாக அறிமுகம் செய்து உள்ளார் முத்தையா. இந்த படத்தின் பூஜை இன்றைய தினம் மதுரையில் போடப்பட்டு, சூட்டிங் துவங்கப்பட்டுள்ளது. இதில் இயக்குநர் முத்தையா மகன் விஜய் முத்தையாவிற்கு ஜோடியாக தர்ஷினி மற்றும் பிரிகிடா சாகா ஆகியோர் இணைந்துள்ளனர். ஆக்சன் மற்றும் காதல் என கிராமத்து பின்னணியில் உருவாக உள்ள இந்த படத்தின் ஷூட்டிங் இன்றைய தினம் மதுரையில் துவங்கியுள்ளது. படத்தை கேகேஆர் சினிமாஸ் சார்பில் ரமேஷ் பாண்டியன் தயாரிக்க உள்ளார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு: ஜென் மார்ட்டின் இசையமைக்க உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை படக்குழுவினர் விரைவில் வெளியிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கார்த்தி நடித்த விருமன் படத்தை கடைசியாக இயக்கி இருந்தார் முத்தையா. கிராமத்து சப்ஜெக்ட்டில் உருவாகியிருந்த இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் முத்தையாவின் அடுத்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் தன்னுடைய மகனை கதாநாயகனாக முத்தையா களம் இறக்கியுள்ளது மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது. முத்தையா எழுதி, இயக்கும் இந்த படத்தின் கதை இளைஞர்களை மையப்படுத்தி எமோஷனல் கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம்: முழுக்க முழுக்க புது முகங்களை வைத்து இந்த படத்தை முத்தையா இயக்க திட்டமிட்டுள்ளார். படத்தின் ஷூட்டிங் ஒரே கட்டமாக எடுத்து ரிலீஸ் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ஒரு சண்டைக்காட்சி ஒரு வாரம் தொடர்ந்து படமாக்கப்பட உள்ளதாகவும் இதற்காக மிகுந்த பொருட்செளவில் சினிமா திரையரங்கை செட்டாக உருவாக்கியுள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த பூஜையின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.


Click it and Unblock the Notifications











