Don't Miss!
- News
"2047" குறிச்சு வச்சுக்கோங்க.. இந்தியா வல்லரசு நாடாக இருக்கும்.. நெல்லையில் எல்.முருகன் பேச்சு!
- Technology
வெறும் ரூ.249-க்கு இவ்ளோ நன்மைகளா? பலருக்கும் தெரியாத BSNL-ன் சீக்ரெட் ரீசார்ஜ்!
- Sports
15 ரன்னுக்கு 5 விக்கெட்கள்.. என்னா பிட்ச்யா இது??.. நம்பி ஏமாந்த நியூசிலாந்து.. வச்சு செய்த இந்தியா!
- Lifestyle
உங்களுக்கு பிடித்த பெண்ணின் இதயத்தை எளிதில் வெல்வதற்கு இந்த எளிய 5 வழிகள் போதுமாம் தெரியுமா?
- Travel
சென்னைக்கு அருகில் இப்படியொரு அழகான இடமா – பசுமையான நீர், வனப்பகுதி, ட்ரெக்கிங் – ஒரு நாள் சுற்றுலா!
- Finance
அடிச்சது ஜாக்பாட்.. 10000 கோடி முதலீடு செய்யும் மஹிந்திரா & மஹிந்திரா.. எங்கு தெரியுமா..?
- Automobiles
ஓலா, ஏத்தர் எல்லாம் இவங்களுக்கு ஜூஜூபி, 8 மாசத்துல இப்படி ஒரு சாதனைய படைப்பாங்கனு யாருமே எதிர்பார்க்கல!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
கார்த்தியை தொடர்ந்து ஆர்யாவுடன் இணைந்த முத்தையா.. பூஜையுடன் துவங்கிய சூட்டிங்!
சென்னை : இயக்குநர் முத்தையா இயக்கத்தில் சமீபத்தில் வெளியானது விருமன் படம். இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக நடித்திருந்தார்.
சூர்யா தயாரிப்பில் வெளியான விருமன் படம் சிறப்பான விமர்சனங்களையும் நல்ல வசூலையும் கொடுத்துள்ளது.
இதனிடையே அடுத்ததாக நடிகர் ஆர்யாவுடன் இணைந்துள்ளார் முத்தையா. இந்தப் படத்தின் பூஜை இன்றைய தினம் போடப்பட்டுள்ளது.
பிக்
பாஸ்
சீசன்
6..
3வது
போட்டியாளாராக
உள்ளே
நுழைந்தார்
ஷிவின்
கணேசன்..
இனி
ஓடி
ஒளிய
மாட்டேன்!

விருமன் படம்
நடிகர் கார்த்தி, அதீதி ஷங்கர் இணைந்து நடித்த விருமன் படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிப் பெற்றுள்ளது. இந்தப் படத்தை இயக்கியிருந்தார் முத்தையா. முன்னதாக கார்த்தியுடன் இணைந்து முத்தையா இயக்கத்தில் வெளியான கொம்பன் படமும் வெற்றிப்படமாக அமைந்த நிலையில், தற்போது விருமனும் வெற்றிப் பெற்றுள்ளது.

விருமனாக நடித்த கார்த்தி
இந்தப் படத்தில் தன்னுடைய தாயின் மரணத்திற்கு காரணமான தந்தைக்கு பாடம் புகட்டும் மகனாக, தன்னுடைய சொந்த பந்தங்களை அரவணைத்து செல்லும் விருமனாக நடித்திருந்தார் கார்த்தி. அவருக்கு ஜோடி சேர்ந்திருந்தார் பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் அதீதி ஷங்கர்.

சிறப்பான திரைக்கதை
படத்தில் சூரி, பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், மனோஜ், மைனா நந்தினி உள்ளிட்டவர்களின் நடிப்பும் சிறப்பாக அமைந்திருந்தது. திரைக்கதையில் சிறப்பை வெளிப்படுத்தியிருந்தார் முத்தையா. தனக்கேயுரிய கிராமத்து கதைக்களத்தில் இந்தப் படத்தையும் சிறப்பாக கொடுத்திருந்தார்.

ஆர்யாவுடன் முத்தையா கூட்டணி
இதனிடையே இந்தப் படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்துடன் தனது அடுத்தப்படத்தின் வேலையையும் துவக்கி விட்டார். ஆர்யாவின் 34வது படத்தை இயக்கவுள்ளார் முத்தையா. இந்தப் படத்தில் பூஜை இன்றைய தினம் சென்னையில் போடப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் சென்னையில் பாடல் காட்சியுடன் துவங்கவுள்ளது.

ஜிவி பிரகாஷ் இசை
சித்தி இத்னானி இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடி சேர்ந்துள்ளார். ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கவுள்ள நிலையில் இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கவுள்ளார்.

சென்னையில் துவங்கும் சூட்டிங்
சென்னையில் துவங்கவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் பாடல் காட்சிகளுடன் நிறைவு பெறவுள்ள நிலையில், அடுத்ததாக கோவில்பட்டியில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் துவங்கும் எனவும் இந்த சூட்டிங் தொடர்ந்து 45 நாட்கள் நடைபெறும் எனவும் படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.