Muthaiah :கிராமத்து இயக்குநர் முத்தையா சம்பளம் எவ்வளவு தெரியுமா.. தெரிஞ்சிக்கலாம் வாங்க!
சென்னை : இயக்குநர் முத்தையா இயக்கத்தில் அடுத்தடுத்த படங்கள் கிராமத்து பின்னணியில் வெளியாகி வருகின்றன. அவர் கிராமத்து இயக்குநராகவே கொண்டாடப்படுகிறார்.
கடந்த ஆண்டில் வெளியான கார்த்தியின் விருமன் படம் முத்தையாவிற்கு சிறப்பாக கைகொடுத்தது. நல்ல வசூலையும் பெற்றுத் தந்தது.
இந்நிலையில் தற்போது ஆர்யா, சித்தி இத்னானி நடிப்பில் வெளியாகியுள்ள காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளது.
கிராமத்து இயக்குநர் முத்தையாவின் சம்பளம் :நடிகர் சசிகுமார் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டில் வெளியான குட்டிப்புலி என்ற படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக என்ட்ரி கொடுத்தவர் இயக்குநர் முத்தையா. தொடர்ந்து கிராமத்து கதைக்களங்களில் அடுத்தடுத்த படங்களை கொடுத்து வருகிறார் முத்தையா. இதுவே இவரது சிறப்பாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து விஷால், கார்த்தி, ஆர்யா என முன்னணி நடிகர்களை இவர் இயக்கியுள்ளார்.

கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், விருமன் என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் முத்தையா. கடந்த ஆண்டில் நடிகர் கார்த்தியை வைத்து விருமன் படத்தை இயக்கியிருந்தார் முத்தையா. முன்னதாக இந்தக் கூட்டணி கொம்பன் படத்திலும் இணைந்திருந்தது. இரண்டாவது முறையாக கார்த்தியுடன் முத்தையா இணைந்த படத்தில் அவருக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதீதி ஷங்கர் இணைந்திருந்தார்.
இந்தப் படத்தை நடிகர் சூர்யாவே தனது 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரித்திருந்தார். இநத்ப் படத்தில் நடிகை அதீதி ஷங்கர் ஒரு பாடலையும் பாடியிருந்தது படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்திருந்தது. தன்னுடைய மகன்களை அடக்க நினைக்கும் அப்பாவிற்கும் மகனுக்குமான போராட்டம் இந்தப் படத்தில் மிகவும் அழகாக காட்டப்பட்டிருந்தது. அழகான கெட்டப்புகளில் வலம்வரும் நடிகர் கார்த்தி, இந்தப் படத்தில் ஏத்திக்கட்டிய வேட்டியுடன் வலம் வந்ததும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்தை வெற்றிப் படமாக்கியது.
இந்நிலையில், தற்போது ஆர்யா, சித்தி இத்னானி உள்ளிட்டவர்களை கொண்டு காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படம் வெளியானது. இந்தப் படமும் கிராமத்து சப்ஜெக்டை மையமாக கொண்டே வெளியானது. இந்நிலையில், இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனால் இந்தப் படத்தை இயக்குவதற்காக முத்தையா 3 கோடி ரூபாய் வரையில் சம்பளம் பெற்றதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.
மண்வாசனையுடன் முத்தையா அடுத்தடுத்த படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில், இவர் இதுவரை 8 படங்களை இயக்கியுள்ளார். ஆர்யாவின் படமும் கிராமத்து பின்னணியிலேயே வெளியானது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படமும் அந்த அளவிற்கு ரசிகர்களை கவரவில்லை. தொடர்ந்து ஒரே மாதிரியான கிராமத்து பின்னணி கதைக்களத்தை மட்டுமே முத்தையா எடுத்துவரும் நிலையில், இந்தப் படம் அவருக்கு கைக்கொடுக்கவில்லை.


Click it and Unblock the Notifications











