Director Muthaiah: பிரபல ஹீரோ தயாராக இல்லாததால் என் மகனை ஹீரோவாக்கினேன்.. முத்தையா விளக்கம்!

சென்னை: நடிகர்கள் கார்த்தி, விஷால், ஆர்யா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களை வைத்து அடுத்தடுத்த கிராமத்து கதைக்களங்களில் படங்ளை கொடுத்துள்ளவர் இயக்குநர் முத்தையா. குட்டிப்புலி படம் மூலம் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமான முத்தையா தொடர்ந்து விருமன், கொம்பன், மருது என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்துள்ளார். பெரும்பாலும் கிராமத்து பின்னணியிலேயே இவர் தன்னுடைய படங்களை கொடுத்துள்ளார். அடுத்ததாக இவரது படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்பட்ட நிலையில் தன்னுடைய மகனை ஹீரோவாக அறிமுகம் செய்யவுள்ளார் முத்தையா.

இந்தப் படத்தின் பூஜை தற்போது போடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் முத்தையாவின் மகன் விஜய் முத்தையா ஹீரோவாக நடிக்கவுள்ள நிலையில் அவருக்கு ஜோடியாக தர்ஷினி, பிரிகடா சாகா என இரு நாயகிகள் இணைந்துள்ளனர். பள்ளிக் காதலை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கேகேஆர் சினிமாஸ் சார்பில் ரமேஷ் பாண்டியன் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளார். ஜென் மார்ட்டின் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இந்தப் படத்தின் பூஜை மிகவும் எளிமையாக சென்னையில் போடப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங்கை ஒரே கட்டமாக எடுத்து முடிக்க முத்தையா திட்டமிட்டுள்ளார்.

Director Muthaiah updates about the movie which he director with his son Vijay Muthaiah

இயக்குநர் முத்தையா: நடிகர்கள் கார்த்தி, விஷால், ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து கொம்பன், விருமன், மருது, காதர் பாட்சா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளவர் முத்தையா. சசிக்குமார், லட்சுமி மேனன் லீட் கேரக்டர்களில் நடிக்க குட்டிப்புலி என்ற படத்தின்மூலம் இவர் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்தப் படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில் தொடந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் பயணித்து வருகிறார். பெரும்பாலும் கிராமத்து கதைக்களங்களில் இவரது படங்கள் வெளியாகி கிராமத்து கேரக்டர்களை ரசிகர்களின் கண்முன்னே கொண்டு வந்துக் கொண்டிருக்கின்றன.

முன்னணி நடிகர்களுடன் கூட்டணி: அந்த வகையில் இவரது விருமன், காதர் பாட்சா படங்கள் ரசிகர்களிடையே சிறப்பான விமர்சனங்களை பெற்றிருந்தன. இந்நிலையில் அடுத்ததாக தன்னுடைய மகன் விஜய் முத்தையாவை ஹீரோவாக்கவுள்ளார் முத்தையா. இந்தப் படத்தின் பூஜை தற்போது மதுரையில் போடப்பட்டு சூட்டிங் துவங்கப்பட்டுள்ளது. மண்மணம் கமழும் வகையிலான படங்களை தொடர்ந்து கொடுத்துவரும் முத்தையா இந்தப் படத்தில் பள்ளிப் பருவ காதலை மையமாக கொண்டு திரைக்கதை அமைத்துள்ளார். படத்தில் விஜய் முத்தையாவுடன் தர்ஷினி, பிரிகிடா சாகா என இரு நாயகிகள் இணைந்துள்ளனர்.

மகனை ஹீரோவாக்கிய முத்தையா: கேகேஆர் சினிமாஸ் சார்பில் ரமேஷ் பாண்டியன் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளார். ஜென் மார்ட்டின் இசையமைக்க கமிட்டாகியுள்ளார். இந்தப் படம் குறித்து பேசிய முத்தையா, காதர் பாட்ஷா படத்திற்கு பிறகு முன்னணி ஹீரோ ஒருவரின் படத்தை இயக்கவிருந்ததாகவும் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டதால் படத்தின் சூட்டிங் தள்ளிப் போனதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் ஒரு படத்தை இயக்கி விடலாம் என்று தன்னுடைய மகனின் படத்தை இயக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மதுரை அருகே படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் ஒரே கட்டத்தில் படப்பிடிப்பை முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம்: இந்தப் படத்திற்கான பூஜை போடப்பட்டுள்ள நிலையில், அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. பள்ளிப் பருவ காதலை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகி வந்தாலும் ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு படத்தின் கதைக்களத்தை உருவாக்கியுள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. மிகுந்த பொருட்செலவில் இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடைபெறவுள்ள நிலையில், கதை எந்தமாதிரி இருக்கும் என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X