வெற்றிமாறன் எனக்கு கிடைத்த வைரம் - செல்ஃபி இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பாராட்டிய மூத்த இயக்குநர்

சென்னை : கலைப்புலி எஸ் தாணுவின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் செல்ஃபி. படத்தில் ஜிவி பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் மேனன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். படத்தின் ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் மிஷ்கின், வெற்றிமாறன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Recommended Video

எனக்கும் வெற்றிமாறனுக்கு தான் போட்டி GV Prakash Speech Selfie Press Meet

செல்ஃபி படம்

செல்ஃபி படம்

அசுரன், கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, கலைப்புலி எஸ் தாணு தற்போது செல்ஃபி படத்தை தயாரித்து முடித்துள்ளார். படத்தில் ஜிவி பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்துள்ளனர்.

ட்ரெயிலர் -இசை வெளியீடு

ட்ரெயிலர் -இசை வெளியீடு

வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மதிமாறன் படத்தை இயக்கியுள்ளார். படத்தின் நாயகன் ஜிவி பிரகாஷ் படத்தின் இசையமைப்பையும் மேற்கொண்டுள்ளார். படத்தின் ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலைப்புலி எஸ் தாணு, ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினருடன் இயக்குநர்கள் வெற்றிமாறன், மிஷ்கின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மிஷ்கின் சிறப்பு பேச்சு

மிஷ்கின் சிறப்பு பேச்சு

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் தாணு, நாயகன் ஜிவி பிரகாஷ், இயக்குநர் வெற்றிமாறன், படத்தின் இயக்குநர் மதிமாறன், மிஷ்கின் உள்ளிட்டவர்கள் படம் குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். மிஷ்கின் பேசுகையில் என்னுடைய நண்பன் வெற்றிமாறனின் உதவி இயக்குநர் மதிமாறன் அங்கீகரிக்கப்படும் மேடை இது என்று கூறினார்.

வெற்றிமாறன் எனக்கு கிடைத்த வைரம்

வெற்றிமாறன் எனக்கு கிடைத்த வைரம்

மேலும் வெற்றி மாறன் தனக்கு கிடைத்த வைரம் என்றும் தன்னுடைய உதவி இயக்குநர்களில் வெற்றிமாறன் ஜெயித்துக் கொண்டே இருப்பான் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் அவரது உதவி இயக்குநர் மதிமாறனிடம் வெற்றி தெரிகிறது என்றும் கூறினார். இந்தப் படம் கமர்ஷியலாக சிறப்பாக அமைந்துள்ளதாகவும் கூறினார்.

பெரிய வில்லன் கவுதம் மேனன்

பெரிய வில்லன் கவுதம் மேனன்

தொடர்ந்து பேசிய அவர் தமிழ்நாட்டில் தற்போதைய பெரிய வில்லன் கவுதம் மேனன் என்றும் குறிப்பிட்டார். யாரையாவது அவர் குத்திக்கொண்டே இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இளைய தலைமுறையினர் பலருக்கும் ஆலமரமாக தாணு இருப்பதாகவும் அவர் கூறினார். ஜிபி பிரகாஷுடன் தான் விரைவில் இணையவும் விருப்பம் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X