மனைவி வேண்டாம்னு முடிவு.. விவாகரத்து கேட்டேன் - பர்சனல் லைஃப் குறித்து மனம் திறந்த மிஷ்கின்
சென்னை: தமிழ் சினிமா பிரபலங்களின் சொந்த வாழ்க்கை குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ள இங்கு ரசிகர்களுக்கு எப்போதும் ஆர்வம் குறைந்ததே இல்லை. இதற்கு காரணம் திரையில் ஒருவரைப் பார்த்து ரசிகர்கள், அவர்களை தங்களது ரோல் மாடலாக ஏற்றுக் கொள்கின்றனர். அவர்களின் பர்ஷனல் லைஃப் குறித்தும் தெரிந்து கொள்ள விரும்புகின்றார்கள். திரைப்பிரபலங்களின் சொந்த வாழ்க்கை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை இணையத்தில் தொடர் வேட்டையில் உள்ளனர் என்றே கூறலாம். திரைப்பிரபலங்கள் விவாகரத்து செய்துகொண்டால், தங்களது வீட்டில் இருந்தவர்களில் ஒருவருக்கு இப்படியான சூழல் ஏற்பட்டுள்ளது என மனம் வருந்தவும் செய்கின்றார்கள். இப்படியான நிலையில் இயக்குநர் மிஷ்கின் தனது சொந்த வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார்.
இயக்குநர் மிஷ்கின், தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் இயக்குநராகவும் பாராட்டுக்குரிய நடிகராகவும் திகழ்கின்றார். இதுமட்டும் இல்லாமல், இவர், சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இதில், துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும்போது அவருக்கும் விஷாலுக்கும் ஏற்பட்ட பிரச்னையால் படத்தின் மொத்த உரிமையையும் விஷாலுக்கு கொடுத்துவிட்டு விலகினார். இவரது இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம், பிசாசு 2. இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார். படத்தின் சில முன்னோட்டக் காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

இவரது படங்களுகு எந்த அளவிற்கு ரசிகர்கள் உள்ளார்களோ, அதே அளவுக்கு மிஷ்கினின் நடிப்புக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திலும், சவரக்கத்தி படத்திலும் இவரது நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றது. சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் அட்டகாசமான நடிப்பினை வெளிப்படுத்தினார்.
மிஷ்கின்: தொடர்ந்து நடித்து வந்த மிஷ்கின், இனி நடிப்புக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு, மீண்டும் படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தலாம் என முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள மிஷ்கினின் சொந்த வாழ்க்கை குறித்து யாருகும் பெரிதாக தெரியாது. இப்படியான நிலையில் மிஷ்கின் தனது சொந்த வாழ்க்கை குறித்து முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.

விவாகரத்து: மிஷ்கினின் இயற்பெயர் சண்முக ராஜா. ஃபியோடர் தஸ்தவெஸ்கியின் தி இடியட் நாவலில் இடம்பெற்ற மிஷ்கின் என்ற கதாபாத்திரத்தின் மீது அவருக்கு ஏற்பட்ட ஈடுபாட்டினால் தனது பெயரை மிஷ்கின் என மாற்றி வைத்துக் கொண்டார். இவருக்கு திருமணம் நடைபெற்று ஒரு மகள் இருக்கின்றார். இவருக்கு சினிமா மீது ஏற்பட்ட விருப்பத்தினால், தனது மனைவியை பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக தனது மனைவியிடம், " எனக்கு விவாகரத்து கொடுத்துவிடு. நான் சினிமாவில் காட்டும் ஆர்வத்தை என்னால் குடும்பத்தின் மீது காட்டமுடியவில்லை. எனவே தயவு செய்து விவாகரத்து கொடுக்கவேண்டும் எனக் கேட்டதாகவும், ஆனால் எனது மனைவியின் பதில் மற்றும் அதில் இருக்கும் நியாயத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எனவே நான் அவருக்கு விவாகரத்து கொடுக்கவும் இல்லை. விவாகரத்து கேட்டு தொந்தரவும் செய்யவில்லை. எங்கள் இருவருக்கும் இடையில் எங்களது மகள் இருக்கின்றார்" என தெரிவித்துள்ளார்.

பாராட்டு: இந்த தகவல் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும், தனது மனைவியின் தரப்பில் முன் வைக்கப்பட்ட விஷயத்தில் இருக்கும் நியாயத்தை ஒப்புக் கொண்ட மிஷ்கினை பலரும் பாராட்டி வருகின்றனர். திரைத்துறையில் இருந்தாலும் தான் ஒருவர் எடுத்த முடிவினால் தனது பார்ட்டனருக்கு விவாகரத்து அறிவிக்கும் பலருக்கு மத்தியில் மிஷ்கின் பாராட்டுக்குரியவர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











