ஒரே இடத்தில் மீட் செய்த ரெண்டு ஜாம்பவான்கள்... அட சூரியும் இருக்காரே!
சென்னை : இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி இணைந்துள்ள புதிய படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டிலேயே துவங்கியது.
ராமின் முந்தைய படங்கள் கவனத்தை ஈர்த்த நிலையில் இந்தப் படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின், இந்தப் படத்தின் சூட்டிங்கை நேரில் சென்று பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ராம்
இயக்குநர் ராம் தமிழ் சினிமாவில் பல்வேறு சிறப்பான படங்களை கொடுத்துள்ளார். இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மலையாள முன்னணி நடிகர் நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டவர்களை வைத்து படம் இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பு
மாநாடு படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியை அடுத்து தன்னுடை வீ ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார் சுரேஷ் காமாட்சி. கடந்த ஆண்டில் துவங்கப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

யுவன் இசை
படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடற்கரையை ஒட்டி இந்தப் படத்தின் சூட்டிங் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்தப் படத்தில் சூரிக்கு மிகவும் முக்கியமான கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு
இந்நிலையில் இன்றைய தினம் சூரி இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இன்றைய தினம் இனியதொரு துவக்கம் என்றும் ராம் மற்றும் நிவின் பாலியுடன் பயணிப்பது பெருமகிழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சுரேஷ் காமாட்சிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மிஷ்கின் வருகை
இதனிடையே, சூட்டிங் ஸ்பாட்டிற்கு இன்றைய தினம் இயக்குநர் மிஷ்கின் நேரடியாக சென்று படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் நட்பு ரீதியாக இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது சூரி, நிவின் பாலி, சுரேஷ் காமாட்சி, ராம் உள்ளிட்டோருடன் இணைந்து அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

நிவின் பாலியை இயக்கும் ராம்
இயக்குநர் ராம் இயக்கத்தில் தங்க மீன்கள், கற்றது தமிழ், பேரன்பு போன்ற படங்கள் தமிழ்சினிமாவில் வெளியாகி அதிர்வுகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது நிவின் பாலியுடன் புதிய படத்தில் களமிறங்கியுள்ளார் ராம். இந்தப் படத்திற்கு சிறப்பான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











