Myskkin: ரஜினி சொன்னதை நாம் அப்படி எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.. மிஷ்கின் அதிரடி!

சென்னை: நடிகர் ரஜினியின் ஜெயிலர் படம் அடுத்த வாரத்தில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தின் இசை வெளியீடு கடந்த வாரத்தில் நடைபெற்ற நிலையில், நேற்றைய தினம் மிரட்டலான ட்ரெயிலர் வெளியானது.

கடந்த வாரத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டில் பேசிய, ரஜினிகாந்த், காக்கா -பருந்தை வைத்து குட்டிக்கதை சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.

Director Myskkin comments about the Small story said by Actor Rajinikanth

விஜய்யை ரஜினிக்கு அதிகமாக பிடிக்கும் என மிஷ்கின் பேச்சு: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த படத்தை தொடர்ந்து அடுத்த வாரத்தில் ஜெயிலர் படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் ரிடையர்ட் ஜெயிலராக ரஜினி நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத். அவரது இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக தமன்னா -ரஜினிகாந்த் ஆட்டம் போட்டுள்ள காவாலா பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்தப் பாடல் தொடர்ந்து யூடியூபில் ட்ரெண்டிங்கில் உள்ளது. ரசிகர்கள் மட்டுமில்லாமல் பிரபலங்களும் இந்தப் பாடலுக்கு ரீல்ஸ்களை பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். மேலும் படத்தின் ஹுகும், ஜூஜுபி பாடல்களும் லிரிக் வீடியோவாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. ரஜினி படத்திற்கு மிகவும் சிறப்பான இசையை கொடுத்துவரும் அனிருத், இந்தப் படத்திலும் மிரட்டலான பாடல்கள் மற்றும் பிஜிஎம்மை கொடுத்துள்ளார்.

படத்தின் இசை வெளியீடு கடந்த மாதம் 28ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இன்னும் சில தினங்களில் படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் மிரட்டலான ட்ரெயிலரும் நேற்றைய தினம் வெளியானது. இந்நிலையில் கடந்த வாரத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டு, சிறப்பித்தனர். குறிப்பாக ரஜினியின் பேச்சு அதிகமாக ரசிகர்களை கவர்ந்தது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். குடிப்பழக்கம் தன்னுடைய வாழ்க்கையில் எத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்தியது என்பதை மனம்திறந்து பேசினார். மேலும் காக்கா -பருந்தை வைத்து குட்டிக்கதையையும் அவர் கூறினார். சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கான போட்டி தமிழ் சினிமாவில் ஏற்பட்ட நிலையில், இந்த பேச்சு நடிகர் விஜய்யை குறிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து விஜய் ரசிகர்கள் வெகுண்டெழுந்தனர். தன்னுடைய வயதை மீறி ரஜினிகாந்த், இப்படி நடந்துக் கொண்டது குறித்து கண்டனங்கள் எழுந்தன.

Director Myskkin comments about the Small story said by Actor Rajinikanth

இந்நிலையில், ரஜினியின் இந்தப் பேச்சு குறித்து பிரபல இயக்குநர் மிஷ்கினிடம் கருத்து கேட்கப்பட்டது. இதுகுறித்து பேசிய அவர், அந்த நிகழ்ச்சியை தான் பார்க்கவில்லை, கருத்து சொல்லவும் முழு விருப்பம் இல்லை என்று முதலில் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், ரஜினி பேசியதை, அந்த கோணத்தில் நாம் பார்க்க வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளார். அவ்வளவு பெரிய மனிதர் இந்தளவிற்கு அவதூறாக யாரையும் குறிப்பிட்டிருக்க மாட்டார் என்றும் மிஷ்கின் கூறியுள்ளார்.

விஜய்யும் சாதாரண ஆள் இல்லை என்றும் அவரும் பெரிய ஆள் என்றும் மிஷ்கின் கூறியுள்ளார். ரசிகர்கள் இதுகுறித்து சண்டையிடுவதை அவர்கள் புரிந்துக் கொள்ளவேண்டும் என்றும் விஜய்யை அனைவருக்கும் பிடிக்கும், ரஜினிக்கும் பிடிக்கும் என்று கூறிய மிஷ்கின், பெரியர் சொன்னதை நாம் அப்படி புரிந்துக் கொள்ள வேண்டியதில்லை என்று மீண்டும் அறுதியிட்டு கூறினார். தற்போது விஜய்யுடன் லியோ படத்தில் மிஷ்கின் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X