Mysskin: கருக்கலைப்பு குறித்து கேட்ட மகள்.. நறுக்குனு பதில் சொன்ன மிஷ்கின்.. ஷாக்கான ரசிகர்கள்!

சென்னை: இயக்குநர் மிஷ்கின் தமிழ் சினிமாவில் கடந்த சில தசாப்தங்களாகவே தவிர்க்க முடியாத இயக்குநராக உள்ளார். வழக்கமான கமர்ஷியல் மசாலா படங்களுக்கு மத்தியில், எந்த ஒரு இடத்திலும் யாருக்காகவும் தனது திரை மொழியையும், கதை சொல்லும் பாணியையும் மாற்றிக் கொள்ளாதவர் மிஷ்கின். இயக்குநராக தமிழ் சினிமாவில் அறியப்பட்ட மிஷ்கின், அதன் பின்னர் நடிகர், பாடகர், இணை இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என பல பரிமாணங்களில் உயர்ந்து நிற்கின்றார். தற்போது இசை அமைப்பாளர் அவதாரத்தினையும் எடுத்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது மகள், கருக்கலைப்பு குறித்து தன்னிடம் கேட்டதாகவும் அப்போது அவர் அளித்த பதில் குறித்தும் கூறியுள்ளார்.

மிஷ்கினின் இயற்பெயர் சண்முக ராஜா. ஃபியோடர் தஸ்தவெஸ்கியின் தி இடியட் நாவலில் இடம்பெற்ற மிஷ்கின் என்ற கதாபாத்திரத்தின் மீது அவருக்கு ஏற்பட்ட ஈடுபாட்டினால் தனது பெயரை மிஷ்கின் என மாற்றி வைத்துக் கொண்டார். இவருக்கு திருமணம் நடைபெற்று ஒரு மகள் இருக்கின்றார். இவர் தனது திருமண வாழ்வில் 8 ஆண்டுகள் இருந்த மிஷ்கின், அதன் பின்னர் மனைவியைப் பிரிந்து வாழ்கின்றார். ஆனால் இருவரும் இதுவரை விவாகரத்து கோரவில்லை.

myssin myssin interview myssin daughter

மிஷ்கின் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இதில், துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும்போது அவருக்கும் விஷாலுக்கும் ஏற்பட்ட பிரச்னையால் படத்தின் மொத்த உரிமையையும் விஷாலுக்கு கொடுத்துவிட்டு விலகினார். இவரது இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம், பிசாசு 2. இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ளார். படத்தின் சில முன்னோட்டக் காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

மிஷ்கின்: இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. குறிப்பாக அந்தப் பேட்டியில், மிஷ்கின் தனது இளமைக் காலங்கள் குறித்தும், சினிமாவுக்கு அவர் வருவதற்கு முன்னர் என்னவெல்லாம் செய்தார் என்றும் வெளிப்படையாகக் கூறினார். இப்படியான நிலையில், மிஷ்கின் தனது மகள் குறித்தும் மனைவி குறித்தும் இதற்கு முன்னர் அளித்த பேட்டியில் அவ்வளவாகக் கூறவில்லை.

myssin myssin interview myssin daughter

கருக்கலைப்பு: ஆனால், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் அவரது மனைவி குறித்தும், மகள் குறித்தும் கூறியது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அந்தப் பேட்டியில் அவர் பேசியதாவது, " எனது மகள் தற்போது கட்டிடக்கலைத்துறை படித்துக் கொண்டு உள்ளார். ஒருமுறை எனது மகள், என்னிடம் வந்து கருக்கலைப்பு குறித்து கேட்டார். குறிப்பாக அவரது கல்லூரியில் இது தொடர்பாக விவாதித்ததாகவும், நீங்கள் அதிக புத்தகங்கள் படிப்பதால் உங்களது கருத்து என்ன எனத் தெரிந்து கொள்ள தான் விரும்பதாகவும் கூறினார்.

மிஷ்கின் பதில்: உடனே நான், நான் என்ன நினைக்கின்றேன் என்பதைவிட, இப்போது கருக்கலைப்பு குறித்து உனக்கு என்ன தோன்றுகின்றதோ, அதுகுறித்து எழுது. ஒரு வருடத்திற்குப் பின்னர், அல்லது சில ஆண்டுகளுக்குப் பின்னர் இதே கருத்து இருக்கின்றதா? மாறிவிட்டதா? எனப்பார் எனக் கூறினேன். மேலும் எனது மகளின் கேள்விக்கு நான் கடைசிவரை பதிலே கூறவில்லை" என பதில் அளித்தார்.

More from Filmibeat

Read more about: மிஷ்கின்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X