Mysskin: வச்சி செஞ்சிட்டான் என்னை.. மடோன் அஸ்வின் குறித்து மிஷ்கின் மகிழ்ச்சி!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாவீரன். படம் இந்த மாதம் 14ம் தேதி ரிலீசாகவுள்ளது.
படத்தை மண்டேலா புகழ் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். படத்தில் இயக்குநர் மிஷ்கின் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகியுள்ளார்.
படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தற்போது ப்ரீ ரிலீஸ் விழா நடத்தப்பட்டுள்ளது. இதில் படக்குழுவினர் பங்கேற்று பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டனர்.

மடோன் அஸ்வின் தன்னை வைத்து செய்ததாக மிஷ்கின் உற்சாகம்: நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் படம் வரும் 14ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாகவுள்ளது. தெலுங்கில் மாவீரடு என்ற பெயரில் படம் ரிலீசாகவுள்ளது. மண்டேலா புகழ் இயக்குநர் மடோன் அஸ்வின் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. மண்டேலா படத்திற்கு இசையமைத்த பரத் ஷங்கர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
முன்னதாக ஆகஸ்ட்டில் படம் ரிலீசாகவிருந்த நிலையில், ஜெயிலர் படத்தின் ரிலீஸ் அந்த மாதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதால், மாவீரன் படம் தற்போது முன்னதாகவே ரிலீசாகவுள்ளது. படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன்கள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின் ட்ரெயிலரும் வெளியிடப்பட்டது.
பயந்தாங்கொள்ளியான ஹீரோ, அமானுஷ்ய சக்தியால் வலிமை பெற்றதாக உணர்ந்து, வில்லன்களை எதிர்ப்பதாக இந்த ட்ரெயிலர் காணப்படுகிறது. படத்தில் காமெடி மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்கு குறைவிருக்காது என்பது இந்த ட்ரெயிலர் மூலம் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்று பல்வேறு விஷயங்களை ஷேர் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.
படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனக இயக்குநர் மிஷ்கின் நடித்துள்ளார். அவரது கெட்டப் வேட்டி -சட்டையுடன் சிறப்பாக காணப்படுகிறது. இந்நிலையில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாமன்னன் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், தன்னுடைய கமிட்மெண்ட்கள் முடிந்தவுடன் விரைவில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து படம் இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். எப்போது வேண்டுமானாலும் இந்தக் கூட்டணி இணையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மிஷ்கின் தன்னை இயக்குநர் மடோன் அஸ்வின் வைத்து செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். முதலில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்று தன்னிடம் கூறியதாகவும் இது தனக்கு சர்ப்பிரைஸ் கொடுத்ததாகவும் அதுபோல இந்தப் படமும் ரசிகர்களுக்கு கண்டிப்பாக சர்ப்பிரைஸ் கொடுக்கும் என்றும் மிஷ்கின் தெரிவித்துள்ளார். இதனிடையே படத்தில் நடித்துள்ள நடிகை சரிதா, சிவகார்த்திகேயன் ரஜினியை போல உள்ளதாக தெரிவித்ததாகவும், சிவகார்த்திகேயன் ரஜினிதான் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











