Mysskin - அட மிஷ்கின் மகளா இவங்க?.. ஹீரோயினுக்கே டஃப் கொடுக்குறாங்களே.. ட்ரெண்டாகும் புகைப்படம்
சென்னை: மிஷ்கின் கோலிவுட்டின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் தற்போது ட்ரெய்ன் படத்தை இயக்கிவருகிறார். அதுமட்டுமின்றி நடிகராகவும் கலக்கிவரும் அவர் இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்திலும் நடித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து அவர் இயக்கிய அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பையே பெற்றன.

முகமூடி மிஷ்கின்: மிஷ்கின் மிகவும் எதிர்பார்த்து செய்த படம் முகமூடி. எதார்த்த வாழ்க்கையிலிருந்து ஒரு சூப்பர் ஹீரோ என்ற ஒன்லைனை அடிப்படையாக வைத்து அந்தப் படம் உருவாகியிருந்தது. ஜீவா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மிஷ்கின் பேசிய பேச்சுக்கும், படத்துக்கும் துளிகூட சம்பந்தமே இல்லை என்றும் ரசிகர்கள் வெளிப்படையாகவே விமர்சித்தனர்.
பிசாசு: பேய் படங்கள் என்றாலே திகிலும், படபடப்பும் நிறைந்த காட்சிகள் என்ற டெம்ப்ளேட்டை உடைத்தவர் மிஷ்கின். அவர் இயக்கிய பிசாசு படத்தை பார்க்கும்போது பயம் வருவதற்கு பதிலாக அந்த பேய் மீது இரக்கமும், காதலும் வரும். அந்த அளவுக்கு படத்தை செதுக்கியிருப்பார். அடுத்ததாக அவர் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியிருக்கிறார். படமானது விரைவில் வெளியாகவிருக்கிறது.
நடிகர் மிஷ்கின்: இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் கலக்கிவருகிறார் மிஷ்கின். சவரக்கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் விஜய்யுடன் லியோ, சிவகார்த்திகேயனுடன் மாவீரன் ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். அதேபோல் பாலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் வணங்கான் படத்திலும் முக்கியமான ரோலை மிஷ்கின் ஏற்றிருக்கிறார். தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திய அவர் இனி இயக்கவேமாட்டாரா என்ற சந்தேகத்தை ரசிகர்கள் கிளப்பினர்.
ட்ரெய்ன்: ஆனால் மிஷ்கின் அந்த சந்தேகத்தை போக்கும் விதமாக மீண்டும் படம் இயக்குகிறார். விஜய் சேதுபதியை வைத்து ட்ரெய்ன் என்ற படத்தை இயக்குகிறார் அவர். அதற்கான பூஜை சமீபத்தில்தான் போடப்பட்டது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். நீண்ட நாட்கள் கழித்து மிஷ்கின் படம் இயக்குவதால் நிச்சயம் படம் சிறப்பாகவே இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.
மிஷ்கின் குடும்பம்: இதற்கிடையே மிஷ்கினுக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறார். ஆனால் தனது மனைவியை பிரிந்து பல வருடங்களாக வாழ்ந்துவரும் மிஷ்கின் பேட்டிகளில் தனது மகள் பற்றி நிறையவே பேசியிருக்கிறார். மேலும் வெளிநாட்டில் அவருடைய மகள் படித்துவருவதாகவும் ஒரு தகவல் திரைத்துறையில் உண்டு.
இந்நிலையில் மிஷ்கினின் மகள் புகைப்படம் என்று ஒன்று வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதில் மிஷ்கினுடன் இருக்கும் இளம்பெண் ஆரஞ்சு நிற புடவையில் இருக்கிறார். மிஷ்கின் வெள்ளை வேட்டி சட்டை அணிந்திருக்கிறார். இரண்டு பேரும் கோயிலுக்கு முன்பு நின்றுகொண்டிருக்கிறார்கள். இதனை பார்த்த ரசிகர்கள் இவர்தான் மிஷ்கினின் மகளா ஹீரோயினுக்கே போட்டியாக இருக்காங்களே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். அதேசமயம் இவர் உண்மையில் மிஷ்கினின் மகள்தானா என்ற கேள்வியையும் ஒருதரப்பினர் எழுப்பிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











