லோகேஷ் கனகராஜ் பெரும் வீரனைப் போல் இயங்குகிறான்.. மிஷ்கின் சொன்ன லியோ அப்டேட்

சென்னை: இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் லியோ படம் குறித்தும் லோகேஷ் கனகராஜ் குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜும், விஜய்யும் மீண்டும் இணைந்திருக்கின்றனர். விஜய் சமீபத்தில் நடித்த வாரிசு படத்தின் ரிசல்ட் சரியாக இல்லாததால் லோகேஷுடன் இணையும் படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார் விஜய்.

அதேபோல் லோகேஷ் கடைசியாக இயக்கிய விக்ரம் படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆகியிருப்பதால் அவர் இயக்கும் இந்தப் படம் மீது ஒட்டுமொத்த திரையுலகமே மிகுந்த எதிர்பார்ப்பை வைத்திருக்கிறது.

லியோ ப்ரோமோ

லியோ ப்ரோமோ

இருவரும் மீண்டும் இணையும் படத்துக்கு லியோ ப்ளடி ஸ்வீட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். இருப்பினும் அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

லியோவில் இணைந்த நட்சத்திர பட்டாளம்

லியோவில் இணைந்த நட்சத்திர பட்டாளம்

லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கப்போகிறார் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்தது. யாரும் எதிர்பார்க்காத விதமாக லியோ படத்துக்குள் த்ரிஷாவை அழைத்துவந்தார் லோகேஷ் கனகராஜ். 14 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவின் எவர் க்ரீன் ஜோடியான விஜய் - த்ரிஷா இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார். அதேபோல், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் வாசுதேவ், சாண்டி மாஸ்டர், மாத்யூ தாமஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே லியோவில் இணைந்திருக்கிறது.

லியோ ஷூட்டிங்கை முடித்த மிஷ்கின்

லியோ ஷூட்டிங்கை முடித்த மிஷ்கின்

காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்துவரும் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக இயக்குநர் மிஷ்கின் கடந்த வாரத்தில் காஷ்மீர் சென்றார். அங்கு அவருக்கான காட்சிகள் மும்முரமாக படமாக்கப்பட்டன. இந்நிலையில் அவருக்கான ஷூட்டிங் தற்போது முடிந்திருக்கிறது. இதுகுறித்து மிஷ்கின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன். -12 டிகிரியில் 500 பேர் கொண்ட லியோ படக்குழு என்னுடைய பகுதியை நிறைவு செய்தனர். சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவு மிகச்சிறப்பாக படமாக்கினார்கள்.

லோகேஷ் கனகராஜ் ஒரு பெரும் வீரன்

லோகேஷ் கனகராஜ் ஒரு பெரும் வீரன்

உதவி இயக்குநர்களின் ஓயாத உழைப்பும் அவர்கள் என்மேல் செலுத்திய அதீத அன்பும் என்னை ஆச்சரியப்பட வைத்தது. லியோ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த காஷ்மீர் குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக்கொண்டிருந்தார். என் லோகேஷ் கனகராஜ் தேர்ச்சி பெற்ற இயக்குநராக அன்புடனும், கண்டிப்புடனும் ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனைப் போல் களத்தில் இயங்கிக்கொண்டிருந்தான். என் கடைசி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினான். அவன் நெற்றியில் நான் முத்தமிட்டேன்.

அருமை தம்பி விஜய்யை மறக்கமாட்டேன்

அருமை தம்பி விஜய்யை மறக்கமாட்டேன்

என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்தப் படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்துகொண்ட விதத்தையும் அவர் அன்பையும் நான் என்றும் மறக்கமாட்டேன். லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும்" என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X