லோகேஷுக்கு முத்தம் கொடுத்த மிஷ்கின்.. விஜய்யின் மறக்க முடியாத குணம் குறித்து பாராட்டு!
சென்னை : நடிகர் விஜய்யின் லியோ படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர்.
படத்தின் காஷ்மீர் ஷுட்டிங்கை மார்ச் மாதத்திற்குள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டு வெறித்தனமாக செயல்பட்டு வருகின்றனர்.

விஜய்யின் லியோ படம்
நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், அர்ஜுன், பிக்பாஸ் புகழ் ஜனனி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது லியோ படம். இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீரில் மிகுந்த குளிருக்கிடையில் நடைபெற்றுவரும் நிலையில், மார்ச் மாதத்திற்குள் படத்தின் சூட்டிங்கை முடிக்க வேண்டி சூட்டிங் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

அடுத்தடுத்த அப்டேட்கள்
நீண்ட நாட்களாக ரசிகர்கள் அப்டேட் கேட்டு கோரிக்கை வைத்த நிலையில், கடந்த மாதத்தில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு வெளியிட்டது. படத்தின் டைட்டில், நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அடுத்தடுத்த அப்டேட்களால் ரசிகர்கள் திக்குமுக்காடினர்.

சிறப்பான புகைப்படங்கள்
இந்நிலையில் காஷ்மீரில் படத்தின் சூட்டிங் துவங்கி கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது. இதில் விஜய், த்ரிஷா, மிஷ்கின் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டுள்ளனர். அவ்வப்போது படத்தின் அப்டேட்கள், புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

சூட்டிங்கை முடித்த மிஷ்கின்
இந்நிலையில் படத்தின் தனது பார்ட் நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கையாக வெளியிட்டுள்ளார். காஷ்மீரிலிருந்து சென்னை திரும்பியுள்ளதாகவும் மைனஸ் 12 டிகிரி குளிரில் 500 பேர் கொண்ட லியோ படக்குழு கடுமையாக உழைத்து தன்னுடைய பகுதியை நிறைவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

படக்குழுவிற்கு பாராட்டு
ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு மிகச்சிறப்பான சண்டைக்காட்சியை படமாக்கியதாகவும் அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் ஓயாத உழைப்பு மற்றும் அவர்கள் தன்மீது காட்டிய அன்பு குறித்தும் மிஷ்கின் பாராட்டியுள்ளார். மேலும் தயாரிப்பாளர் லலித்குமார் அந்த குளிரிலும் சக தொழிலாளியாக உழைத்துக் கொண்டிருந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

லோகேஷுக்கு முத்தம்
லோகேஷ் ஒரு பெரும் வீரனை போல களத்தில் இயங்கிக் கொண்டிருந்ததாகவும் தன்னுடைய கடைசி காட்சி முடிவடைந்தவுடன் தன்னை கட்டித் தழுவியதாகவும் மிஷ்கின் குறிப்பிட்டுள்ளார். மேலும் லோகேஷ் நெற்றியில் தான் முத்தமிட்டதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் மிஷ்கின்.

பண்பாக நடந்துக்கொண்ட விஜய்
இந்தப் படத்தில் விஜய்யுடன் நடிகனாக பணியாற்றியது குறித்தும் மிஷ்கின் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். விஜய் தன்னுடன் பண்பாக நடந்துக் கொண்டதையும் அவரது அன்பையும் தான் எப்போது மறக்க மாட்டேன் என்றும் கூறியுள்ள மிஷ்கின், லியோ படம் மிகச்சிறந்த வெற்றியடையும் என்றும் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











