twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்டார்ட் ஆக்சன்... சினிமா வாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு மிஷ்கின் பயிற்சி

    |

    சென்னை: சினி ஃபீல்டுல எப்படியாவது புகுந்துடனும்னு தினமும் எத்தனையோ இளைஞர்கள் சென்னைக்கு படையெடுத்துக்கிட்டு இருக்காங்க. அவங்களுக்கு உபயோகப்படுறது மாதிரி நம்ம டைரக்டர் மிஷ்கின் ரெண்டு நாள் ட்ரெய்னிங் கிளாஸ் எடுக்குறாரு.

    சினிமா நமக்கு சரிப்பட்டு வராதுன்னு கிராமத்து பெருசுங்க ஒரு காலத்துல சொல்லி சொல்லி கிராமத்தில இருக்குற பல இளைஞர்களை சினி ஃபில்டுக்கு வரவிடாம பண்ணிட்டு இருந்தாங்க.

    Director Mysskin going to take training class about Cinema

    ஆனா அதெல்லாம் கெடையாது, சினிமாங்குறது திறமையும், தகுதியும் உள்ளவங்களுக்கு வாய்ப்ப அள்ளிக் கொடுக்குற அமுத சுரபின்னு நிரூபிச்சாங்க நம்ம இயக்குநர் இமயம் பாரதிராஜாவும், திரைக்கதை அமைப்புல இன்னிக்கு இந்தியாவே கொண்டாடுற பாக்கியராஜும். இவங்கள பாத்து தான் இன்னிக்கும் கிராமத்துல இருந்து நெறைய பேர் சினிமாவுக்குள்ள என்ட்ரி ஆகுறதுக்கு வாய்ப்பு தேடி அலைஞ்சிகிட்டு இருக்குறாங்க.

    இந்த மாதிரி சினிமா வாய்ப்பு தேடுறவங்களுக்கும் சினிமாவ பத்தி கத்துக்குறவங்களுக்கும் இன்னிக்கு அதுக்குன்னே காலேஜ்ல டிகிரி கோர்ஸ் கூட இருக்கு. அரசு திரைப்பட பயிற்சி கல்லூரியும் இருக்கு. கூடவே நெறைய சினிமா பிரபலங்க இதுக்குன்னே டிப்ளமோ கோர்ஸும் நடத்துறாங்க.

    அம்மா தானம் செய்து சிறுநீரக மாற்று ஆபரேஷன் நடந்ததா?: ராணா விளக்கம் அம்மா தானம் செய்து சிறுநீரக மாற்று ஆபரேஷன் நடந்ததா?: ராணா விளக்கம்

    திரைக்கதைய பத்தி சொல்லித் தர்றதுக்கு நம்ம டைரக்டர் கம் நடிகரான பாண்டியராஜன் சார் கூட நெறய மெனக்கெட்ருக்காரு. அதே மாதிரி கேமரான்னு வந்துட்டாலே டக்குன்னு நம்ம ஞாபகத்துக்கு வர்றது பி.சி.ஸ்ரீராம் சார் தான். அவரப் பத்தி இன்னும் சொல்லனும்னா ஸ்கூல் ஆஃப் பிசி அப்பிடின்னு மீடியாகாரங்க சொல்றதுண்டு.

    இப்ப சினிமாவுல என்ட்ரி ஆகுற இளைஞர்கள்லாம் டைரக்டரா ஆகுறதுன்னா என்ன பண்றதுன்னு தெரியாம சில பேர் அசிஸ்டென்ட் டைரக்டரா வேல செஞ்சி கத்துக்குறாங்க. சில பேர் ஷார்ட் ஃபில்ம் டைரக்ட் பண்ணியும் இன்னும் சில பேர் எல்லாத்தையும் கம்ப்யூட்டர் மூலமாவும் கத்துக்குறாங்க.

    இப்பிடி சினி ஃபீல்டுக்கு வர்ற எதிர்கால இளைஞர்களுக்காகவே நம்ம அஞ்சாதே டைரக்டர் மிஷ்கின் சார், சினிமாவ பத்தி கத்துக் கொடுக்குறதுக்கு ரெண்டு நாள் ட்ரெய்னிங்க கிளாஸ் எடுக்கப்போறாரு. இந்த ட்ரெய்னிங் கிளாஸ் சென்னைல இந்த மாசம் 24.08.19 மற்றும் 25.08.19ன்னு ரெண்டு நாள் வார இறுதியில் சனிக்கிழமையும் ஞாயித்துக்கிழமையும் நடக்குது.

    ஒரு நாள் முழுக்க தியரி கிளாஸும் ஒரு நாள் முழுக்க பிராக்டிகல் கிளாஸும் நடக்கப்போகுது. ரெண்டு நாளைக்கும் மத்தியான லஞ்சும் உண்டு. இதுக்குண்டான ஃபீஸ் 10 ஆயிரம் ரூபாய்ங்க. சினிமாவ லவ் பண்றவங்களுக்கு சாப்பாடு முக்கியம் கெடையாது. டைரக்டர் மிஷ்கின் சார் சொல்லித் தர்ற ஒவ்வொரு மேட்டரும் ஒவ்வொரு வார்த்தையும், ஆர்ட் அண்டு கிராஃப்ட்ம் ரொம்ப பெரிய நாலெட்ஜா (Knowledge) இருக்கப்போவரு உறுதி.

    எத்தனையோ சினிமா ஜாம்பவன்கள்லாம் சினிமாவ பத்தி வெவ்வேற கோணத்துல சொல்லிக் கொடுத்திருக்காங்க. நம்ம மிஷ்கின் சார் என்னவெல்லாம் சொல்லித்தர போறாரு, இதுல கத்துக்கிற ஸ்டூடண்ட்களுக்கு எந்த அளவுக்கு பிரயோஜனமா இருக்கப்போவுதுன்ன வெய்ட் பண்ணி பாப்போம்.

    English summary
    There are lot of people coming to Chennai to somehow enter the world of cinema. Director Mysskin will be hold a two-day workshop to benefit them.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X