Mysskin: வாடிவாசல் படத்திற்கு பிறகு சூர்யா லெஜெண்டாக மாறிவிடுவார்.. மிஷ்கின் உற்சாகம்!
நடிகர் சூர்யா -இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக உள்ள படம் வாடிவாசல். இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்ட சூழலில் தொடர்ந்து பல்வேறு காரணங்களால் இந்த படத்தின் சூட்டிங் தள்ளி போய் வருகிறது. தன்னுடைய விடுதலை மற்றும் விடுதலை 2 படங்களில் பிஸியாக உள்ளார் வெற்றிமாறன். இதே போல சூர்யாவும் அடுத்தடுத்த கமிட்மெண்ட்களில் பிஸியாக உள்ளார்.
இதனால் வாடிவாசல் படத்தின் சூட்டிங் எப்போது துவங்கும் என்பதில் தொடர்ந்து மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றது. தற்போது இயக்கிவரும் விடுதலை 2 படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு சூர்யாவின் வாடிவாசல் படத்தில் வெற்றிமாறன் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது பேட்டியொன்றில் இயக்குனர் மிஷ்கின் வாடிவாசல் படம் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

வாடிவாசல் படம்: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை மற்றும் விடுதலை 2 படங்கள் அடுத்தடுத்து சூட்டிங் நடந்து வருகிறது. இதில் விடுதலை படம் கடந்த ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இந்நிலையில் தற்போது விடுதலை 2 படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள சூழலில் படத்தில் விஜய் சேதுபதிக்கான டீ ஏஜிங் தொழில்நுட்ப வேலைகளை கடைப்பிடிப்பதற்காக அமெரிக்கா செல்ல உள்ளார் வெற்றிமாறன். இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தடுத்த படங்கள்: அடுத்த கட்டமாக வாடிவாசல் படத்தின் சூட்டிங்கில் சூர்யாவுடன் வெற்றிமாறன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன்னுடைய அடுத்த படத்தில் இணைய உள்ளார் சூர்யா. இந்தப் படத்தின் ஷூட்டிங்கை அவர் நிறைவு செய்வதற்கும் விடுதலை 2 படத்தின் ஷூட்டிங்கை வெற்றிமாறன் நிறைவு செய்வதற்கும் சரியாக இருக்கும் என்றும் இந்த இரு படங்களை இவர்கள் முடித்த பின்பு வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மிஷ்கின் உற்சாகம்: இதற்காக முன்னதாக நடிகர் சூர்யா டெஸ்ட் ஷூட்டில் ஈடுபட்டிருந்தார். தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளை ஒன்றை தன்னுடைய வீட்டில் அவர் வளர்த்து வருவதாகவும் அதனுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் குறித்து தற்போது இயக்குனர் மிஷ்கின் பேட்டியொன்றில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இந்த படம் குறித்தும் சூர்யா மற்றும் வாடிவாசல் படத்தின் கதைக்களம் குறித்தும் சமீபத்தில் தான் வெற்றிமாறனிடம் பேசியதாகவும் இந்த படம் கண்டிப்பாக இந்திய அளவில் மிகப்பெரிய படமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சூர்யா குறித்து பாராட்டு: மேலும் சூர்யா தொடர்ந்து சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள மிஷ்கின், வாடிவாசல் படம் சூர்யா கேரியரில் சிறப்பாக அமையும் என்றும் இந்த படம் வெளியானவுடன் சூர்யா லெஜெண்டாக மாறிவிடுவார் என்றும் தனது பேட்டியில் மேலும் மிஷ்கின் கூறியுள்ளார். அதிகமான புத்தகங்களை படிக்கும் பழக்கமுடைய வெற்றிமாறன், வாடிவாசல் நாவலில் தான் எடுத்துக் கொண்டுள்ள கதைக்களம் குறித்தும் தன்னிடம் பேசியதாகவும் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











