உங்க மனைவிகூட இப்படி பார்த்திருக்கமாட்டாங்க.. நாசரிடம் மிஷ்கின் ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
சென்னை: இயக்குநர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய அத்தனை படங்களும் ஏதோ ஒருவகையில் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தவை. அவர் தற்போது ட்ரெய்ன் படத்தை இயக்கிவருகிறார். அதுமட்டுமின்றி நடிகராகவும் கலக்கிவரும் அவர் டிராகன், வணங்கான் ஆகிய படங்களில் கடைசியாக நடித்தார். இந்நிலையில் அவர் பறந்து போ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியது ட்ரெண்டாகியிருக்கிறது.
யூத் உள்ளிட்ட படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குநராக இருந்த மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்தின் இயக்குநராக அறிமுகமானார். நரேன், பாவனா உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படம் ஆஹா ஓஹோ அளவுக்கு ஹிட் இல்லை என்றாலும் மிஷ்கினுக்கும் அவரது திரை மொழிக்கும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதனையடுத்து அவர் இயக்கிய அஞ்சாதே திரைப்படம் மெகா ஹிட்டானது.
முகமூடியில் தோல்வி கண்ட மிஷ்கின்: மிஷ்கின் மிகவும் எதிர்பார்த்து செய்த படம் முகமூடி. நிஜ வாழ்க்கையிலிருந்து ஒரு சூப்பர் ஹீரோ என்ற ஒன்லைனை அடிப்படையாக வைத்து அந்தப் படம் உருவாகியிருந்தது. ஜீவா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. இந்தத் தோல்வி முன்பே கணிக்கப்பட்டதுதான் என பின்நாட்களில் ஜீவா கொடுத்த ஒரு பேட்டீல் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிசாசு டூ ட்ரெய்ன்: பேய் படங்கள் என்றாலே திகிலும், படபடப்பும் நிறைந்த காட்சிகள் என்ற டெம்ப்ளேட்டை உடைத்தவர் மிஷ்கின். அவர் இயக்கிய பிசாசு படத்தை பார்க்கும்போது பயம் வருவதற்கு பதிலாக அந்த பேய் மீது இரக்கமும், காதலும் வரும். அந்த அளவுக்கு படத்தை செதுக்கியிருப்பார். அடுத்ததாக அவர் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார். ஆனால் படம் வெளியாகவில்லை. இப்போது அவர் ட்ரெய்ன் படத்தை இயக்கியிருக்கிறார். கண்டிப்பாக இப்படம் மெகா ஹிட்டாகி மிஷ்கினுக்கு ஒரு கம்பேக்காக அமையும் என்று ஆரூடங்கள் கூறப்படுகின்றன.
நடிப்பிலும் பிஸி: இதற்கிடையே இயக்குநராக மட்டும் கலக்கிவந்த மிஷ்கின் நடிகராகவும் ஸ்கோர் செய்கிறார். அவரது நடிப்பில் வெளியான லியோ, மாவீரன், வணங்கான், ட்ராகன் உள்ளிட்ட அத்தனை படங்களும் மிஷ்கினுக்கு பெயர் சொல்லும்படியாகவே அமைந்தது. இந்நிலையில் நடிகர் நாசர் குறித்து தான் அளித்த பேட்டியில் மிஷ்கின் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
மிஷ்கினின் பேட்டி: அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ட்ரெய்ன் படத்தில் நாசரும் நடித்திருக்கிறார்கள். அவரது மூக்கை நான் 360 டிகிரியில் படம் பிடித்தேன். அப்போது அவரிடம் நான், 'நாசர் உங்கள் மூக்கை உங்கள் மனைவிகூட இப்படி பார்த்திருக்கமாட்டாங்க. நான்தான் இப்படி காட்டுகிறேன் என சொன்னேன். எப்போதுமே மூக்கு பல விஷயங்களை சொல்லும். ஆப்பிரிக்கர்களின் மூக்கு பெரிதாக இருக்கும். இந்தியர்களின் மூக்கு நேர்த்தியாக இருக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications











