twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இப்போதுதான் படமெடுக்க கற்றுக்கொண்டேன்.. மிஸ்கின் பேட்டி

    |

    சென்னை : சைக்கோ படம் வரும் 24ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் குறித்து இயக்குனர் மிஸ்மின் சில சுவாரஸ்ய தகவலை தெரிவித்துள்ளார்.

    டபுள் மீனிங் புரொடக்சன் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் சைக்கோ. உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அதிதி ராவ், நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். சிங்கம்புலி, ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

     director mysskin interview

    இயக்குனர் மிஸ்கின் தமிழ் சினிமாவில் மிக வித்தியாசமான படங்களை இயக்கியவர். இவரின் படத்திற்கென தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரின் ஒவ்வொரு படமும் பல தாக்கத்தை நம்மிடத்தில் கொடுக்கும். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருக்கிறார்.

    இயக்குனர் மிஸ்கின் அதிக புத்தக வாசிக்கும் பழக்கம் உடையவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அவர் துப்பறிவாளன் படத்தையே ஷெர்லாக் ஹோம்ஸ் எனும் நாவலின் தாக்கத்தில் தான் இயக்கி இருந்தார். அவரின் ஒவ்வொரு படமும் காட்சிகளும் நாவலின் வாயிலாக உயிர்பெருகிறது . கதாபாத்திரங்களை பற்றிய நல்ல புரிதல் கொண்ட மிஸ்கின் கதாபாத்திரங்கள் பற்றிய ஒரு முக்கிய விசயத்தை பகிர்ந்து உள்ளார் .

     director mysskin interview

    அதில் கதாபாத்திரங்கள் அனைத்தும் தான் செய்வது சரிதான் என நம்பி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையில் பயணிக்கின்றனர். அப்போது ஏற்படும் நெறுடல்களும் பிரச்சினைகளும் தான் கதைகளை தருகின்றன என கூறினார் .

    அதே போல சைக்கோ படமும் கதாபாத்திரங்களின் பல செயல்களும் அதற்கேற்ற எதிர்வினைகளும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளும் மொத்தமாக முடிவு என்ன என்பதே ஆகும். இந்த படத்தில் பல சுவாரஸ்யமான விசயங்கள் அடங்கி இருப்பதாக மிஸ்கின் கூறினார் .

     director mysskin interview

    மிஸ்கின் உதவியாளர் ஒருத்தர் படத்தை பார்த்து விட்டு படம் அருமையான முறையில் எடுக்க பட்டு இருப்பதாக கூறினார். அதற்கு மிஸ்கின் நான் இப்போது தான் படமெடுக்க கற்று கொண்டுள்ளேன் என கூறியுள்ளார். மிஸ்கின் அதற்கு நல்ல விளக்கமும் அளித்து இருந்தார் அஞ்சாதே படம் 3 மணிநேரம் பிசாசு படம் 2 மணி நேரம் கூட கிடையாது. ஏனெனில் இது போதும் இது சரியாக இருக்கும் என்ற மனநிலைக்கு மிஸ்கின் வந்து விட்டார் என்பதை இது உணர்த்துகிறது.

    Recommended Video

    நல்ல படம் எடுப்பவர்களுக்கு எப்போதும் திமிர் இருக்கும்- மிஸ்கின் பேச்சு- வீடியோ

    மிஸ்கின் படங்களில் தனித்துவமானது கதாபாத்திரங்கள் தான், சைக்கோ படத்தில் எப்படிபட்ட கதாபாத்திர வடிவமைப்பு இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சைக்கோவிற்கு பிறகு மிஸ்கின் துப்பறிவாளன்2 படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தின் லண்டன் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து படத்தின் மற்ற பணிகள் நடந்து வருகிறது.

    English summary
    director mysskin interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X