தளபதி 67 வில்லன் ரேஸில் மிஷ்கின்... திடீரென விஜய்யுடன் நெருக்கம் காட்டும் பின்னணி என்ன?

சென்னை: விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது.

இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'தளபதி 67' படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.

தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக இயக்குநர் மிஷ்கின் நடிக்கவுள்ளதாகவும், அதன் பின்னணியில் இன்னொரு முக்கியமான காரணம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

விரைவில் தளபதி 67

விரைவில் தளபதி 67

விஜய் தற்போது வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வாரிசு படத்தை முடித்துவிட்டு உடனடியாக தளபதி 67-ல் நடிக்கவுள்ளார் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படம் கேங்க்ஸ்டர் ஜானரில் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இது லோகேஷின் யுனிவர்ஸாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

விஜய்யின் வில்லன்கள்

விஜய்யின் வில்லன்கள்

முன்னதாக லோகேஷ் விஜய் - கனகராஜ் கூட்டணி மாஸ்டர் படத்தில் மரண மாஸ் காட்டியிருந்தனர். கொரோனா காரணமாக 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற போதிலும் 200 கோடி வசூலித்து கெத்து காட்டியது. இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது உருவாகவுள்ள 'தளபதி 67' படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க பெரிய நட்சத்திரப்பட்டாளமே கமிட் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே லோகேஷ் ஃபேவரைட்டான மன்சூர் அலிகான் தளபதி 67ல் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

மிஷ்கின் கூட்டணி

மிஷ்கின் கூட்டணி

மேலும், கெளதம் மேனன், சஞ்சய் தத், மலையாள நடிகர் பிருத்விராஜ் ஆகியோரும் விஜய்க்கு வில்லனாக நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், இப்போது இயக்குநர் மிஷ்கின் தளபதி 67ல் கமிட் ஆகியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மிஷ்கின் தற்போது 'மாவீரன்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்து வருகிறார். இதனிடையே விஜய்க்கு வில்லனாகவும் மிஷ்கின் நடிக்க உள்ளதாக வெளியான தகவல்கள் வைரலாகி வருகின்றன.

ஸ்பை திரில்லர்

ஸ்பை திரில்லர்

தளபதி 67 படம் குறித்த அபிஸியல் அனொவ்ன்ஸ்மெண்ட் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அப்போது மிஷ்கினும் நடிப்பது குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விஜய் நடிப்பில் ஒரு ஸ்பை திரில்லர் படத்தை இயக்க மிஷ்கின் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே தளபதி 67ல் வில்லனாக நடிக்க மிஷ்கின் ஓக்கே சொல்லிவிட்டதாகவும், இந்தப் படத்தின் ஷூட்டிங் நடுவிலேயே மிஷ்கினின் படம் குறித்து விஜய்யுடன் டிஸ்கஷன் நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய் - மிஷ்கின் காம்போ கண்டிப்பாக ரொம்பவே சூப்பராக இருக்கும் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X