twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டூப் போடாமல், கயிறு கட்டாமல் ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்த இயக்குநர் மிஷ்கின்!

    By Shankar
    |

    ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ஒரு சண்டைக் காட்சியில் ஓடும் ரயிலிருந்து கீழே குதித்துள்ளார் இயக்குநர் மிஷ்கின். இதற்காக அவர் எந்த இடத்திலும் டூப்பைப் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    லோன் வுல்ஃப் என்று சொந்தப் பட நிறுவனம் தொடங்கியுள்ள இயக்குநர் மிஷ்கின், இளையராஜா இசையில் ஓநாயும் ஆட்டுக் குட்டியும் படத்தைத் தயாரித்து இயக்கி வருகிறார்.

    இதில் ஓநாயின் குணம் கொண்ட மனிதன் வேடத்தில் இயக்குநர் மிஷ்கினும், ஆட்டுக்குட்டியைப் போன்ற சாது கேரக்டரில் வழக்கு எண் பட ஹீரோ ஸ்ரீயும் நடிக்கின்றனர்.

    Director Mysskin jumped from running train with any dupe

    இந்தப் படத்துக்காக சமீபத்தில் ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அதில் ஓடும் ரயிலிலிருந்து இயக்குநர் மிஷ்கின் குதிக்க வேண்டும். ரயில் கொஞ்சம் வேகமாக ஓடும். தண்டவாளத்தில் நிறைய மின்சாரக் கம்பங்கள் வேறு இருந்தன.

    எனவே இந்தக் காட்சியை டூப் வைத்து எடுக்கலாம் என ஸ்டன்ட் மாஸ்டர் பில்லா ஜெகன் கூறினாராம். ஆனால் காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என கறாராக சொல்லிவிட்ட மிஷ்கின், டூப் போடாமல், கயிறு கட்டாமல், கிரீன் மேட் உபயோகிக்காமல் இந்தக் காட்சியில் ரயிலிலிருந்து குதித்து பிரமிக்க வைத்துள்ளார்.

    இது குறித்து ஜெகன் கூறுகையில், "மிஷ்கின் இதற்காக எந்தப் பயிற்சியும் எடுக்கவில்லை. எங்களுக்கு பயமாகத்தான் இருந்தது.

    ஆனால் முதல் டேக் திருப்திகரமாக இல்லாததால் மீண்டும் ஒரே டேக் குக்கு போய் இந்த காட்சியை வெற்றிகரமாக எடுத்து முடித்தார் மிஷ்கின்.

    இந்த காட்சி மிக சிறப்பாக வந்துள்ளது. மிஷ்கின் உழைப்பை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது துணிச்சலுக்கும் அர்பணிப்புக்கும் நான் தலைவணங்குகிறேன். இவருடன் பணிபுரிவதை நான் பெருமையாகவும் கௌரவமாகவும் கருதுகிறேன்," என்றார்.

    English summary
    Director Mysskin has recently jumped from a train without any dupe or rope.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X