Dragon movie: நொந்து நூடுல்ஸ் ஆன மிஷ்கின்.. கெட்ட வார்த்தை பேசலை என உறுதி!
சென்னை: நடிகர் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் 21ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது டிராகன் படம். இந்தப் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள நிலையில் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.
முன்னதாக கோமாளி, லவ் டுடே படங்கள் மூலம் மிகப்பெரிய அளவில் ஹிட் இயக்குநராகியுள்ளார் பிரதீப் ரங்கநாதன். அவர் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெயிலர் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இன்றைய தினம் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

டிராகன் படம்: நடிகர் பிரதீப் ரங்கநாதன் -அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவாகியுள்ள டிராகன் படம் வரும் 21ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தின் அடுத்தடுத்த பாடல்கள், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தின் ட்ரெயிலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில், படத்தில் கல்லூரி மாணவராக பிரதீப் அட்ராசிட்டி செய்வது தெரிகிறது.
பிரதீப் ரங்கநாதன் படம்: 40க்கும் மேற்பட்ட அரியர்ஸ் வைத்திருக்கும் பிரதீப் ரங்கநாதன் செய்யும் அதிரடியை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ள நிலையில் அதிகமான திரையரங்குகளில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இன்றைய தினம் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் விக்னேஷ் சிவன் பங்கேற்று பேசினார். இவர் பிரதீப்பின் லைப் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை இயக்கி வரும் நிலையில் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
மிஷ்கின் பேச்சு: இந்நிலையில் சர்ச்சை மன்னன் மிஷ்கின் நிகழ்ச்சியில் பேசியதை அனைவரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கினர். ஆனால் முதலிலேயே தான் கெட்ட வார்த்தைகள் பேசப்போவதில்லை என்று அவர் உறுதி அளித்தார். தொடர்ந்து ஒரு கொம்பை அறுத்தெடுத்துவிட்டதாகவம் ஒரே ஒரு கொம்புதான் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தான் ஒரு ஆண்டு காலத்திற்கு எந்த பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்கக்கூடாது என்று உறுதியுடன் இருந்ததாகவும் ஆனால் மூன்று நபர்களுக்காக இந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். படத்தின் ஹீரோ பிரதீப் ரங்கநாதன், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் ஆகியவர்களுக்காக இந்த நிகழ்ச்சியில் தான் பங்கேற்றுள்ளதாக மிஷ்கின் கூறியுள்ளார்.
மிஷ்கின் பாராட்டிய 3 நபர்கள்: தான் தயாரிப்பாளர் அகோரத்துடன் ஒரு படத்தில் பணியாற்றியதாகவும் அவர் தயாரிப்பாளராக இல்லாமல் தன்னுடைய தந்தையாக செயல்பட்டதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார். தொடர்ந்து படத்தின் நாயகன் பிரதீப் குறித்து பேசிய மிஷ்கின், அவர் ஒரு புரூஸ்லி போன்றவர் என்று பாராட்டியுள்ளார். படத்தில் தான்தான் பிரதீப்பிற்கு வில்லன் என்றும் ஆனால் நல்ல வில்லன் என்றும் பாராட்டியுள்ளார். அவர் மிகப்பெரிய உயரங்களை தொடுவார் என்றும் உற்சாகத்தை பகிர்ந்துள்ளார். இதேபோல இந்தப் படத்தில் மிகவும் டெரிபிளாக அஸ்வத் மாரிமுத்து செயல்பட்டுள்ளதாகவும் படத்தில் இந்த காலத்து இளைஞர்களுக்கான படிப்பினையை அஸ்வத் கொடுத்துள்ளதாகவும் பாராட்டு தெரிவித்தள்ளார்.


Click it and Unblock the Notifications











