பலான புத்தகம் படித்து மாட்டிக் கொண்ட சம்பவத்தைச் சொன்ன மிஷ்கின்.. விழுந்து சிரித்த வெற்றி மாறன்!
சென்னை: வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ள படம் பேர்ட் கேர்ள். இந்த படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வர்ஷா எழுதி இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த படம் வரும் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் ஒரு சில படத்தை மிகவும் மோசமாக விமர்சித்தனர். படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று எல்லாம் பிரச்னைகள் எழுந்தது. சென்சார் தரப்பில் இருந்து பல காட்சிகள் நீக்க வேண்டும் என கூறியதால், படக்குழு நீதிமன்றம் சென்று போராடி படத்திற்கு சென்சார் வாங்கி, படத்தை ரிலீஸ் செய்யவுள்ளது.
இந்நிலையில் படக்குழு இன்று அதாவது செப்டம்பர் 1ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இந்த சந்திப்பில் இயக்குநரும் வெற்றிமாறனின் நண்பருமான மிஷ்கின் கலந்து கொண்டிருந்தார். அவர் பேசியது பலரது கவனத்தை ஈர்த்தது. அதாவது, " இந்த சமூகத்தில் ஒரு மாதத்தின் 30 நாட்களும் ஆண்களுக்கு இயல்பாக கடந்துவிடுகிறது. ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை, கொஞ்ச நாட்கள் வீட்டில் முடங்கி இருக்கச் சொல்கிறார்கள், பூஜை அறைக்குள் வரவேண்டாம் என்கிறார்கள். ஆண்களை விட பெண்கள்தான் பலமானவர்கள்.

நான் என்னுடைய 17 வயதில் இருக்கும்போது பலான புத்தகம் படிக்கலாம் என்று எனக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லி வீட்டில் மூன்று புத்தகங்களை வாங்கி வைத்திருந்தேன். அந்த பலான புத்தகத்தை எனது அம்மா வீட்டில் இல்லாத நேரம் பார்த்து தான் படிப்பேன். அம்மா வீட்டின் உள்ளே இல்லாத சமயங்களில் நான் அந்த பலான புத்தகத்தில் இருக்கும் படங்களை மட்டும் பார்த்துவிட்டு மூடி வைத்துவிடுவேன்.
மாட்டிக் கொண்ட மிஷ்கின்: அம்மா ஒரு முறை மார்க்கெட் சென்றுவிட்டு, ஒருவரைச் சந்தித்து விட்டு வருவதாக கூறினார். மேலும் அவர் வருவதற்கு இரண்டு மணி நேரத்திற்கும் மேல் ஆகும் என்று கூறினார். இதனால் அம்மா வீட்டை விட்டு வெளியே போனதும் நான் வீட்டுக் கதவை மூடிவிட்டு, அந்த மூன்று புத்தகங்களையும் நான் படித்தேன். அப்போது வீட்டு கதவு தட்டப்படுகிறது. நான் யார் என்று கேட்டால், அம்மா என்று என் அம்மாவின் குரல் கேட்கிறது. நான் உடனே எங்கள் வீட்டில் இருந்த டிவிக்குப் பின்னால் இந்த புத்தகங்களை எறிந்துவிட்டு, கதவைத் திறந்தேன்.

கண்டுபிடித்த அம்மா: அம்மா தான் பஸ்க்கு பணம் எடுக்காமல் சென்று விட்டதாகவும் அதனால் தான் பணம் எடுக்கலாம் என்றும் வந்ததாகவும் கூறினார். நான் கதவைத் திறந்துவிட்டு பயத்தில் ஜுரம் வந்தது போல உள்ளது என்று சொல்லிவிட்டு விளையாட ஓடி விட்டேன்( வெற்றி மாறன் கைதட்டி சிரித்தார்) . அதன் பின்னர் சுமார் 4 மணி நேரம் கழித்து வீட்டிற்கு வரும்போது நான் டிவிக்கு பின்னால் தூக்கி எறிந்த பலான புத்தகங்கள் மேசை மீது இருந்தது. அதோடு ஒரு காகிதமும் இருந்தது.
காம உணர்வுகள்: நான் ஒன்று சொல்கிறேன், இதுவே நான் ஒரு பெண்ணாக இருந்து பலான புத்தகம் படித்திருந்தால் எனது அம்மா என்னை வளர்த்திருக்க மாட்டார். இந்த சமூகத்தில் காம உணர்வு என்பது ஆண்களுக்கு ஒரு மாதிரியும் பெண்களுக்கு ஒரு மாதிரியும் இருக்க வேண்டும் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது" என்று கூறினார். இவரது இந்த பேச்சு தற்போது இணையவாசிகள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











