Mysskin :கலைப்புலி தாணு தயாரிப்பில் படம் இயக்கவுள்ளேன்.. மிஷ்கின் வெளிப்படை!
சென்னை :அதிரடியான கருத்துக்களை பேசுபவர்களில் ஒருவர் இயக்குநர் மிஷ்கின். இவரது இயக்கத்தில் பிசாசு 2 படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
சமீபத்தில் டைனோசரஸ் படத்தின் விழாவில் பேசிய மிஷ்கின், தண்ணி அடிப்பது தம் அடிப்பதற்கு ஆதரவாக பேசிய கருத்துக்கள் விமர்சனங்களை ஏற்படுத்தின.
இவர் தற்போது விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்து நடித்துள்ளார். சிறிய கேரக்டராக இருந்தாலும் மிகவும் சுவாரஸ்யமானது என்று அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தாணு தயாரிப்பில் படமியக்கும் மிஷ்கின் : அதிரடியான கருத்துக்களுக்கு சொந்தக்காரர் இயக்குநர் மிஷ்கின். இவரது இயக்கத்தில் துப்பறிவாளன், பிசாசு போன்ற படங்கள் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றன. அடுத்ததாக பிசாசு 2 படம் இவரது இயக்கத்தில் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்தப் படத்தில் நடிகை ஆன்ட்ரியா லீட் கேரக்டரில் நடித்துள்ளார். படத்தில் அவர் நிர்வாணக் காட்சியில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே மிகச்சிறந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இதனிடையே இயக்கத்திலிருந்து தன்னுடைய கவனத்தை திருப்பியுள்ளார் மிஷ்கின். தற்போது படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். விஜய்யின் லியோ படத்தில் அவர் வில்லனாக களமிறங்கியுள்ளார். இந்தப் படத்தின் காஷ்மீர் சூட்டிங்கில் பங்கேற்ற அவர், தனது போர்ஷனை முடித்துக் கொடுத்துவிட்டு சென்னை திரும்பினார். தொடர்ந்து படம் குறித்த அப்டேட்டையும் வெளியிட்டார். படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தாலும் மிகவும் சுவாரஸ்யமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படம் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாக இருக்கும் என்றும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்றும் அவர் தற்போது பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இதனிடையே அவர் அடுத்ததாக இயக்கவுள்ள படம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், தயாரிப்பாளரை தேடிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து தயாரிப்பாளர் தாணுவிற்காக தான் அடுத்தப் படத்தை இயக்கவுள்ளதாக தெரிவித்தார்.

மிஷ்கினின் பிசாசு 2 படம் ரிலீசுக்காக காத்திருக்கும் நிலையில், தனது அடுத்தப்படத்தை தாணு தயாரிக்கவுள்ளதாக மிஷ்கின் தெரிவித்துள்ளது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து உணர்வுப்பூர்வமான கதைக்களங்கில் படமியக்கிவரும் மிஷ்கின், அந்தப் படத்தில் எந்த மாதிரியான கதைக்களத்தை கையிலெடுப்பார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதனிடையே மிஷ்கினின் சகோதரர் இயக்கி முடித்துள்ள டெவில் படத்தில் அவரது இசை சிறப்பாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின்மூலம் முதல்முறையாக இசையமைப்பாளராகவும் மிஷ்கின் களமிறங்கியுள்ளார். இந்தப் படம் அறிவிப்பின்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியிருந்தது. ரசிகர்களை இருக்கை நுனியில் கட்டிப்போடும் புதுமையான த்ரில்லர் படமாக இந்தப் படம் இருக்கும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டது. அதனால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











