Mysskin: குட்டிம்மா சாரிடா செல்லம்.. விஜய்யை கொஞ்சிய மிஷ்கின்.. எதற்காக தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சில பேட்ச் வேலைகளே மீதமுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் இயக்குநர்களின் மாநாடுதான் நடக்கிறது என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. இயக்குநர் கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான் மட்டுமில்லாமல் ஹாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

படத்தில் விஜய் தனது சூட்டிங்கை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில் தற்போது படத்தின் எஞ்சிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

Director Mysskin opens up about the action sequence with Vijay in Leo movie,

விஜய்யை கொஞ்சிய மிஷ்கின்: நடிகர் விஜய்யுடன் த்ரிஷா 14 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ள படம் லியோ. மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் விஜய் -லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்துள்ளது. முன்னதாக கமலின் விக்ரம் படத்தை இன்டஸ்ட்ரியல் ஹிட்டாக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இணைந்துள்ள லியோ படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. லியோ படமும் இன்டஸ்ட்ரியல் ஹிட்டடிக்குமா எனற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

படத்தில் கேங்ஸ்டராக நடித்துள்ள விஜய், இருவேறு கெட்டப்புகளில் காணப்படுகிறார். சமீபத்தில் விஜய் பிறந்தநாளையொட்டி படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள், பர்ஸ்ட் சிங்கிள் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்நிலையில், படத்தின் இசை வெளியீடு, ட்ரெயிலர் குறித்த அப்டேட்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். படத்தின் இசை வெளியீடு மதுரையில் நடத்தப்பட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தில் விஜய்யுடன் இயக்குநர்கள் கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜூன் இவர்களுடன் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பும் இணைந்துள்ளார். இத்தனை இயக்குநர்களை அவர்களின் தலையீடு இல்லாமல் இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இசையும் படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்களும் படத்தில் இணைந்துள்ளனர். ஏராளமான நடிகர்கள் லியோ படத்தில் நடித்துள்ளனர்.

லியோ படத்தில் தன்னடைய போர்ஷனை நடிகர் விஜய் முடித்துக் கொடுத்துள்ளார். இதுகுறித்து சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் தெரிவித்திருந்தார். தற்போது காஷ்மீரில் படத்தின் பேட்ச் வேலைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே படம் குறித்து தொடர்ந்து பல விஷயங்களை இயக்குநர் மிஷ்கின் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், லியோ படத்தில் தான் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இந்தப் படத்தில் தான் ஒரு குட்டி வில்லன் என்று முன்னதாக ஒரு பேட்டியில் அவர் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் சூட்டிங்கின்போது ஒரு சண்டைக்காட்சியில் தான் விஜய்யின் தலையில் தெரியாமல் அடித்துவிட்டதாகவும் உடனடியாக பதறி, குட்டிம்மா சாரிடா செல்லம் என்று தான் அவரிடம் மன்னிப்பு கேட்டதாகவும் தற்போது பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் அந்த சண்டைக்காட்சியின்போது இதேபோல தன்னுடைய தலையில் விஜய் அடித்துவிட்டதாகவும் உடனடியாக பதறிய விஜய் தன்னிடம் சாரி கேட்டதாகவும் அதற்கு தான் பரவாயில்லை செல்லக்குட்டி என்று கூறியதாகவும் மிஷ்கின் தெரிவித்துள்ளார். முன்னதாக ஒரு பேட்டியின்போது இந்த சண்டைக்காட்சிக் குறித்து பேசியிருந்தார் மிஷ்கின். தற்போது மீண்டும் இந்த சண்டைக்காட்சியின் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X