அஞ்சாதே பாகம் 2 இயக்க தயாராகும் மிஷ்கின்.. ஹீரோ யார் தெரியுமா?

சென்னை: தமிழ் சினிமாவிலேயே தனித்துவமான திரில்லர் கதைகளை இயக்குவதில் வல்லமை பெற்றவர் இயக்குனர் மிஷ்கின்

பிசாசு வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாவது பாகத்தை இப்பொழுது இயக்கி வருகிறார் அதில் நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்து வருகிறார்

பிசாசு பாகம்-2 படப்பிடிப்பு முடிந்து இப்போது தயாரிப்பு பணிகளில் இருக்க மிஷ்கினுக்கு மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்து அஞ்சாதே பாகம் 2 அடுத்து இயக்க இருப்பதாகவும் அதில் பிஸியான நடிகர் ஒருவரை ஹீரோவாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

 பேய் படங்களின் பிம்பத்தையும் உடைத்தெறியும்

பேய் படங்களின் பிம்பத்தையும் உடைத்தெறியும்

இந்திய சினிமாவில் இதுவரை வெளியான பேய் திரைப்படங்கள் அனைத்தும் பேய்கள் எதிர்மறையாகவே காட்டப்பட்டு வந்தன ஆனால் இதுவரை இருந்த அனைத்து பேய் படங்களின் பிம்பத்தையும் உடைத்தெறியும் வகையில் முதல் முறையாக பேயை தேவதையாக காட்டி பாராட்டுக்களை பெற்ற மிஷ்கினுக்கு பிசாசு மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

 கதாநாயகியாக நடிகை ஆண்ட்ரியா

கதாநாயகியாக நடிகை ஆண்ட்ரியா

பிசாசு ஒன்றின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகத்தை இப்பொழுது மிஷ்கின் இயக்கி வருகிறார். விறுவிறுப்பாக தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று முடிந்துள்ளது இதில் கதாநாயகியாக நடிகை ஆண்ட்ரியா நடித்து வருகிறார். பூர்ணா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, சந்தோஷ் பிரதாப் மற்றும் அஜ்மல் உள்ளிட்டோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அஞ்சாதே

அஞ்சாதே

மிக விரைவிலேயே பிசாசு இரண்டின் தயாரிப்பு பணிகளை தொடங்க உள்ள மிஷ்கின் அடுத்த படத்திற்கும் கதையை தயார் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆம் கடந்த 2008ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான அஞ்சாதே திரைப்படம் மிஷ்கினுக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது மேலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று வெற்றி பெற்றது.

Recommended Video

Vishal பத்தி இனிமே பேசவே மாட்டேன் | Mysskin Controversy speech about Vishal
 அருண் விஜய் ஹீரோவாக நடிக்க இருப்பதாக

அருண் விஜய் ஹீரோவாக நடிக்க இருப்பதாக

இந்த நிலையில் அஞ்சாதே பாகம் இரண்டையும் மிஷ்கின் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் ஹீரோவாக இப்போது தமிழ் சினிமாவில் மிக பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் அருண் விஜய் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அஞ்சாதே படத்தை தயாரித்த தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக்கோடு இப்படத்தை தயாரிக்க உள்ளனர். மேலும் மிஷ்கின் மற்றும் அருண் விஜய் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X