மிரட்டலான பிசாசு 2 படத்தில் அழகான மெலடி பாடல் வெளியானது
சென்னை : இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படம் உருவாகி வருகிறது.
ஆன்ட்ரியா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

மிஷ்கினின் பிசாசு படம்
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. அகால மரணமடைந்து ஆவியாக திரிபவர்களுக்கு ஆசாபாசங்கள் உள்ளதை வெளிப்படுத்தும் வகையில் அந்த படம் அமைந்திருந்தது. படத்தில் ராதாரவியின் நடிப்பு பாராட்டுக்களுக்கு உள்ளானது.

ஆன்ட்ரியா மிரட்டும் பிசாசு 2
இந்நிலையில் தற்போது நடிகை ஆன்ட்ரியா லீட் ரோலில் நடிக்க பிசாசு 2 படத்தை மிஷ்கின் இயக்கி வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் வித்தியாசமான வகையில் அமைந்திருந்தது.

பிசாசு 2 படத்தின் முதல் பாடல்
இந்நிலையில் படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. சித் ஸ்ரீராம் குரலில் இந்த பாடல் வெளியாகியுள்ளது. கார்த்திக் ராஜா இசையமைப்பில் பாடல் சிறப்பாக அமைந்துள்ளது. உச்சந்தலை ரேகையில என்று துவங்கும் பாடலின் வரிகளை கபிலன் எழுதியுள்ளார்.

கேமியோ ரோலில் விஜய் சேதுபதி
ஆன்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதியும் கேமியோ ரோலில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் படத்தில் மொத்தம் 16 நிமிடங்களே நடித்துள்ளதாக மிஷ்கின் தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் பூர்ணா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, ராஜ்குமார் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

கார்த்திக் ராஜா இசை
லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ள இந்த பாடலில் படத்தின் ஸ்டில்களுடன் விதவிதமான வாழ்க்கை சூழல்களையம் இணைத்துள்ளனர். வழக்கம் போல சித் ஸ்ரீராம் தனது மயக்கும் குரலில் பாடலை அழகாக்கியுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











