பிசாசு 2வில் ஆண்ட்ரியா சிறப்பான நடிப்பு… நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்… இயக்குனர் மிஷ்கின்!

சென்னை : வித்தியாசமான பல திரைப்படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் இயக்குனர் மிஷ்கின்.

இவர் இயக்கிய ஒவ்வொரு திரைப்படமும் தரமானதாகவும் பேசும் படியும் இருக்கும்.

இவர் தற்போது பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்தில் ஆண்ட்ரியா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

நல்ல பேய்

நல்ல பேய்

வழக்கமாக பேய் திரைப்படம் என்றால் அந்த திரைப்படத்தில் பேய் அனைவரையும் கொல்லும், பயமுறுத்தும். ஆனால் பிசாசு படத்தில், நல்லது செய்யும் பேய் என ஒரு விசித்திரமான கதையை நமக்கு கொடுத்து இருப்பார் மிஷ்கின். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இல்ல வரவேற்பை பெற்றது.

ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா

பிசாசு திரைப்படத்தின் வெற்றியைத் தொடரந்து பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் மிஷ்கின். இத்திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி இப்படத்தில் கௌரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இப்படத்தை ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். மேலும்,இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டார் வெளியாகி ரசிகர்கள் மனதில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

விரைவில் ரிலீஸ்

விரைவில் ரிலீஸ்

இப்படத்தின் முதற்கட்ட படபிடிப்பு பொள்ளாச்சியில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு நடைபெற்றன. தற்போது அனைத்து கட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்து படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. படம் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய விருது நிச்சயம்

தேசிய விருது நிச்சயம்

இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் ட்விட்டர் ஸ்பேஸில் பேசினார். அப்போது பிசாசு 2 படத்திற்காக ஆண்ட்ரியாக மிகவும் கடுமையாக உழைத்து இருக்கிறார். படத்தில் சிறப்பாக நடித்து இருக்கிறார். இந்த படம் நிச்சயம் வெற்றி பெரும், மேலும் இப்படத்தில் நடித்ததற்காக ஆண்ட்ரியாவுக்கு தேசிய விருதும் கிடைக்கும் என்று மிஷ்கின் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X