Mysskin: மிஷ்கினுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த கமிட்மெண்ட்.. சூப்பர் காம்பினேஷன்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் மாவீரன். வரும் 14ம் தேதி படம் தமிழ், தெலுங்கில் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தில் மிஷ்கின் வில்லனாக கலக்கல் பர்பார்மென்ஸ் கொடுத்துள்ளார். இயக்குநராக பல சிறப்பான படங்களை கொடுத்துள்ள அவர் தற்போது நடிகராகவும் கலக்கி வருகிறார்.

தற்போது டெவில் படத்தின்மூலம் இசையமைப்பாளராகவும் மாறியுள்ளார் மிஷ்கின். அவரது இயக்கத்தில் பிசாசு படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

Director Mysskin says that he going to join with Sivakarthikeyan soon

இயக்குநர் மிஷ்கினுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த கமிட்மெண்ட்: இயக்குநர் மிஷ்கின் பல அழுத்தமான கதைக்களங்களை கொண்ட படங்களை இயக்கியதன்மூலம் சர்வதேச தரத்திலான இயக்குநராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். இவரது துப்பறிவாளன், பிசாசு போன்ற படங்கள் இவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தன. இந்நிலையில் அடுத்ததாக ஆன்ட்ரியா, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் பிசாசு 2 படத்தை உருவாக்கியுள்ளார் மிஷ்கின். இந்தப் படத்தின் போஸ்டர்கள், டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

படம் ரிலீசாவதில் தாமதம் நிலவி வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து மீண்டும் தனியாக மிஷ்கின் படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நடிகராகவும் மாறி பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் மிஷ்கின். தற்போது விஜய்யுடன் லியோ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவர் வில்லனாக களமிறங்கியுள்ளார். தொடர்ந்து மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கும் வில்லனாக நடித்துள்ளார்.

மாவீரன் படம் வரும் 14ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் மாவீரன் படம் குறித்தும் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்தும் தனது சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துக் கொண்டுள்ளார் மிஷ்கின். படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பு தன்னை வெகுவாக கவர்ந்துள்ளதாகவும் அவர் ஒரு ஸ்வீட் பாய் என்றும் அவரை தனக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் மிஷ்கின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தாங்கள் இருவரும் இணைந்து படம் செய்யலாம் என்று சிவகார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவரை வைத்து கண்டிப்பாக தான் படம் இயக்குவேன் என்றும் மிஷ்கின் மேலும் கூறியுள்ளார். தன்னுடைய ஸ்டைலையும் சிவகார்த்திகேயன் ஸ்டைலையும் பேலன்ஸ் செய்யும் வகையில் இந்தப்படம் உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைகளால் விரும்பப்படும் ஒரு நடிகராக தன்னுடைய இமேஜை சிவகார்த்திகேயன் ஏற்படுத்தியுள்ளதையும் மிஷ்கின் சுட்டிக் காட்டினார்.

வித்தியாசமான கதைகளால் தன்னுடைய படங்களை சிறப்பாக்கிய மிஷ்கின், நடிகராகவும் மாறி மாஸ் காட்டி வருகிறார். இந்நிலையில் டெவில் என்ற படத்தின்மூலம் இசையமைப்பாளராகவும் மாறியுள்ளார். மிஷ்கினின் சகோதரர் ஆதித்யா இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார். அடுத்தடுத்த தளங்களில் தன்னை இணைத்துவரும் மிஷ்கின், விஜய்யுடன் எப்படிப்பட்ட கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறித்து அறிந்துக் கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X