Mysskin: படத்துல நான் சின்ன வில்லன்.. லியோ படம் குறித்து அப்டேட் கொடுத்த மிஷ்கின்!

சென்னை: நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா ஜோடி 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது.

டைரக்டர்கள் மாநாட்டைதான் லியோ படத்தில் லோகேஷ் நடத்தி வருகிறாரோ என்று எண்ணும் வகையில் படத்தில் அதிகமான இயக்குநர்கள் நடித்து வருகின்றனர்.

அதில் பிசாசு, துப்பறிவாளன் உள்ளிட்ட அழுத்தமான கதைக்களங்களில் படங்களை இயக்கியுள்ள மிஷ்கினும் ஒருவர். இவர் தொடர்ந்து லியோ குறித்த அப்டேட்களை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார்.

Director Mysskin shares about his character in Vijays Leo movie

லியோ படத்தில் தன்னுடைய கேரக்டர் குறித்து பேசிய மிஷ்கின்: நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான், அனுராக் காஷ்யப், உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ள படம் லியோ. இந்தப் படத்தின் சூட்டிங், டப்பிங் பணிகளை விஜய் உள்ளிட்ட சிலர் முடித்துக் கொடுத்துவிட்டனர். இந்நிலையில் படத்தின் சில பேட்ச் வேலைகளை முடிப்பதற்காக படக்குழுவினர் மீண்டும் காஷ்மீர் சென்றிருந்தனர். அந்த நேரத்தில் இந்தப் படத்தின் சில காட்சிகளில் கேமியோ ரோலாக பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் நடித்துக் கொடுத்துள்ளார்.

முன்னதாக லோகேஷ் கனகராஜ் படத்தில் தான் எந்தவிதமான கேரக்டரிலும் நடிக்க விரும்பவில்லை. மாறாக அவரது படத்தில் இறக்கும்படியான காட்சியில்தான் தான் நடிக்க விரும்புவதாக அனுராக் காஷ்யப் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். லோகேஷ் படங்களில் உயிரிழப்பு மிகவும் மாஸாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் படத்தில் அவர் எதிர்பார்த்ததை போன்ற கேரக்டர் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளதா என்றும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Director Mysskin shares about his character in Vijays Leo movie

படத்தில் ஏராளமான நட்சத்திரங்களை தொடர்ந்து சேர்த்து வருகிறார் லோகேஷ். இவர்கள் அனைவருக்கும் படத்தில் எப்படிப்பட்ட கேரக்டர்கள் அமையும் என்பதை தெரிந்துக் கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். படத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் மற்றும் த்ரிஷா மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். இந்த ஜோடி முன்னதாக நடித்திருந்த படங்கள் அனைத்தும் சிறப்பான வெற்றியை பெற்றுள்ள நிலையில், லியோ படத்திலும் இந்த ஜோடி வெற்றிகரமான ஜோடியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் இயக்குநர் மிஷ்கின் இணைந்துள்ளார். முன்னதாக படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடந்தபோதே, இவர், விஜய்யிடம் அடி வாங்கிய கதையை விலாவரியாக கூறியிருந்தார். தொடர்ந்து படம் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்துவரும் மிஷ்கின், தற்போது படத்தில் தன்னுடைய கேரக்டர் குறித்தும் பேட்டியொன்றில் பேசியுள்ளார். படத்தில் தான் ஒரு சின்ன வில்லன் என்றும் விஜய்யுடன் நடித்தது மிகுந்த சந்தோஷத்தை கொடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து விஜய் ரசிகர்களுக்காக பேசிய மிஷ்கின், விஜய் ஸ்வீட்டான பாய் என்றும், அவரைப் போல அவரது ரசிகர்களும் டீசண்டாக நடந்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ரசிகர்களுக்கு அதிகமான பொறுப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது மிஷ்கின் வில்லனாக நடிக்கும் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் வரும் 14ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. இதற்கான பிரமோஷன்களிலும் மிஷ்கின் ஈடுபட்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X