விஜய் முதலில் அடித்தார்.. பிறகு கட்டிப்பிடித்தார்.. லியோ படத்தின் சுவாரஸ்யம் பகிர்ந்த மிஷ்கின்!
ஸ்ரீநகர் : நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் லியோ.
இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த ஒரு மாத காலமாக காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடுமையான குளிருக்கிடையில் நடைபெற்று வருகிறது.
படத்தில் இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மிஷ்கினின் போர்ஷன்கள் நிறைவு பெற்றது.

லியோ படம்
நடிகர்கள் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், அர்ஜுன், சாண்டி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் லியோ. விஜய்யின் 67வது படமாக உருவாகிவரும் இந்தப் படத்தின் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோர் கடந்த மாதத்தின் முதல் வாரத்தில் அடுத்தடுத்த நாட்களில் அறிவிக்கப்பட்டனர்.

ரசிகர்கள் உற்சாகம்
நீண்ட நாட்களாக லியோ படத்தின் அப்டேட் கேட்டுக் கொண்டிருந்த விஜய் ரசிகர்களுக்கு வாரிசு படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்துடன் லியோ படத்தின் அப்டேட்டும் இணைந்து சிறப்பான உற்சாகத்தை கொடுத்தது. இதனிடையே படத்தின் சூட்டிங் கடந்த ஒரு மாத காலமாக காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடுமையான குளிருக்கிடையில் நடைபெற்று வருகிறது.

சூட்டிங்கை முடித்த மிஷ்கின்
படத்தில் பிரபல இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் மிஷ்கினின் போர்ஷன்கள் நிறைவு செய்யப்பட்டு அவர் சென்னை திரும்பினார். தொடர்ந்து படம் குறித்தும் நடிகர் விஜய், லோகேஷ் உள்ளிட்டவர்கள் குறித்தும் அறிக்கை மூலம் பாராட்டு தெரிவித்திருந்தார்.

மிஷ்கின் சுவாரஸ்யம்
இதனிடையே படக்குழுவினரை மிகவும் மிஸ் செய்வதாக முன்னதாக தெரிவித்துள்ள மிஷ்கின், தொடர்ந்து படம் குறித்த அடுத்தடுத்த நினைவலைகளை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது, ஒரு ஆக்ஷன் காட்சியின்போது விஜய்யின் செயல்பாடு குறித்து மிஷ்கின் பகிர்ந்துள்ளார்.

விஜய்யின் வருத்தம்
அந்த சண்டைக் காட்சியின்போது, தன்னிடம் வந்த விஜய், போலியாக அடித்தாலும், இந்த சண்டைக்காட்சி தனக்கு மனஉளைச்சலை தருவதாக தெரிவித்ததாக மிஷ்கின் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து விஜய்யிடம், தான் ஒரு இயக்குநராக இந்த காட்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதாக தெரிவித்ததாகவும் மிஷ்கின் குறிப்பிட்டுள்ளார்.

மிஷ்கினை அடித்த விஜய்
தன்னை அடிக்குமாறு தானே விஜய்யிடம் கூறியதாகவும் மிஷ்கின் கூறியுள்ளார். இதையடுத்து அந்தக் காட்சிக்காக தன்னை அடித்த விஜய், உடனடியாக தன்னை கட்டித் தழுவியதாகவும் தனக்கு எங்காவது அடிபட்டதா என்று கேட்டுத் தெரிந்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ள மிஷ்கின், அதனால்தான் அவர் ரியல் ஹீரோ என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











