Mysskin :போனி கபூரா.. அது யாரு.. மேடையில் மீண்டும் மிஷ்கின் சர்ச்சை பேச்சு!
சென்னை : இயக்குநர் மிஷ்கின் சிறப்பான படங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார். அவரது இயக்கத்தில் பிசாசு 2 படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
நடிப்பிலும் கவனம் செலுத்திவரும் இயக்குநர் மிஷ்கின், விஜய் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகிவரும் லியோ படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.
சர்ச்சை பேச்சுக்ககளுக்கு சொந்தக்காரரான மிஷ்கின் மேடைகளில் பேசும்போது, தன்னுடைய மனதிற்கு தோன்றும் கருத்துக்களை அப்படியே வெளிப்படுத்திவிடுவார்.

இயக்குநர் மிஷ்கின் சர்ச்சை பேச்சு : இயக்குநர் மிஷ்கின் உணர்வுப்பூர்வமான கதைகளை நேர்த்தியாக படமாக்குவதில் கைதேர்ந்தவர். இவரது பிசாசு, துப்பறிவாளன் போன்ற படங்கள் ரசிகர்களை கட்டிப் போட்டவை. எளிய கதைகள் மற்றும் காட்சி அமைப்புகளால் மிகச்சிறந்த படைப்புகளை கொடுத்துவரும் மிஷ்கின், ரஷ்ய கதையொன்றின் கதாபாத்திரமான மிஷ்கின் என்ற பெயரை தனக்கு சூட்டிக் கொண்டார். அஞ்சாதே, யுத்தம் செய், நந்தலாலா, முகமூடி போன்ற படங்களும் இவருக்கு சிறப்பாக அமைந்தன.
தனித்துவமான தன்னுடைய கதைகள் மூலம் உலகத்தரத்திலான இயக்குநராக தன்னை நிலைநிறுத்தியுள்ள மிஷ்கின், குத்துப் பாட்டிற்கு ஆடுவதோ, பத்து பேரை அடிப்பதோ ஹீரோயிசம் இல்லை என்று தன்னுடைய பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். சினிமா நிஜவாழ்க்கை கிடையாது என்றும் தன்னுடைய படங்களில் இரண்டு மணிநேரத்தில் ரோலர் கோஸ்டர் பயணத்தை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார்.
தன்னுடைய படங்களை பார்க்கும்போது புதிதாக பார்க்க வேண்டும் என்றும் முந்தைய படங்களுடன் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது என்றும் மிஷ்கின் தெரிவித்திருந்தார். ஐந்து வயது குழந்தைகளின் மனநிலையோடு தன்னடைய படங்களை பார்க்க வேண்டும் என்றும் அப்போது தான் தன்னுடைய படங்களை ரசிக்க முடியும் என்றும் அவர் கூறியிருந்தார். இவரது நடிப்பில் வெளியான சவரக்கத்தி மிகச்சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது.
இயக்கத்துடன் நடிப்பையும் தொடர்ந்து வருகிறார் மிஷ்கின். தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன், விஜய்யுடன் இணைந்து லியோ போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இவரது இயக்கத்தில் ஆன்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2 படமும் ரிலீசுக்கு காத்திருக்கிறது. சர்ச்சைக் கருத்துக்களை வெளிப்படுத்துவதில் சிறிதும் யோசிக்காத மிஷ்கின், சமீபத்தில் மேடையொன்றில் பேசுகையில், தயாரிப்பாளர் போனி கபூர் யாரென்றே தனக்கு தெரியாது என்று கூறியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

டைனோசர்ஸ் என்ற படத்தின் பிரமோஷன் விழாவில் பங்கேற்று பேசிய மிஷ்கின், தயாரிப்பாளர் போனி கபூர் யாரென்றே தனக்குத் தெரியாது என்றும் ஆனால் அவரது மனைவியை படங்களின்மூலம் நன்றாக தெரியும் என்றும் கூறியது பார்வையாளர்களை சலசலப்பிற்கு உள்ளாக்கியது. இந்த நிகழ்ச்சியில் போனிகபூரும் பங்கேற்றிருந்த நிலையில், அவரும் இந்த பேச்சையடுத்து அதிர்ச்சிக்குள்ளாகினார். இந்திய அளவில் பிரபலமான தயாரிப்பாளரான போனிகபூரை தெரியாது என்று மிஷ்கின் கூறியது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


Click it and Unblock the Notifications











