பொறுக்கினு கோவத்தில் சொல்லிட்டேன்.. விஷாலுக்கு ஈகோ அதிகம்.. இயக்குநர் மிஷ்கின் உருக்கம்!

சென்னை: பொறுக்கி என்று கோவத்தில் தான் பேசிவிட்டேன் உண்மையில் விஷால் அப்படி இல்லை என்று இயக்குநர் மிஷ்கின் பேசி உள்ளார்.

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள திரைப்படம் அடியே. இப்படத்தில் கவுரி கிஷன் நாயகியாக நடித்துள்ளார்.

Director mysskin speech about vishal in adiyae audio launch

ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ள இப்படத்திறகு மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கிறார். கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மிஷ்கின் பேச்சு: அடியே திரைப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை பிவிஆர் சத்யம் திரையரங்க வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மிஸ்கின், ஒரு இயக்குநருக்கு யாரையும் விமர்சித்து, யாரையும் நகைச்சுவை கதாபாத்திரமாக்கி காட்டுவதற்கு முழுக்க முழுக்க உரிமை இருக்கிறது.

சர்ச்சையாகி விடும் : சினிமாவில் தவறுதலாக ஒருவரின் பெயரை வைத்துவிட்டால், அது சர்ச்சையாகிவிடும், சில நேரம் கேஸாகிவிடுகிறது. என் எழுதிக்கொண்டு இருக்கும் ஒரு கதையில் ஒரு கதாபாத்திரத்திற்கு யுவராஜ் என்று பெயர் வைத்துள்ளேன். ஆனால், இளையராஜா என்று தான் முதலில் யோசித்தேன். ஆனால் அந்த பெயர்வைத்தால் பிரச்சனை என்பதால் மாற்றிவிட்டேன்.

அப்படி என்னை நீங்க எவ்வளவு மோசமானவராக கூட காட்டுங்கள், அதற்கு உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. ஒரு இயக்குநருக்கு சினிமாக்காரர்களாகிய நாம் இந்த முழு சுதந்திரத்தை கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். ஜி.வி.பிரகாஷ் ஒரு ஸ்வீட் பாய். அவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து இன்று தவிர்க்க முடியாத ஒரு நடிகராக மாறிவிட்டார் என்றார்.

Director mysskin speech about vishal in adiyae audio launch

மிஷ்கின் உருக்கம்: தொடர்ந்து பேசிய மிஸ்கின் திரும்பத் திரும்ப நான் பொறுக்கி என்று சொன்னதை பலர் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். விஷாலும் கூட,நான் துரோகத்தை மறக்கவே மாட்டேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார். அப்படி நான் என்ன துரோகம் செய்தேன் எனத் தெரியவில்லை. விஷால் என் இதயத்துக்கு நெருக்கமானவர்.

சண்டை போடாமல் எப்படி வாழ முடியும்? நல்ல நட்பு அது. இருவரும் நேசித்தோம். நான் அவரை மிஸ் செய்கிறேன். அவர் என்னை மிஸ் செய்ய மாட்டார் என்பது எனக்குத் தெரியும். அவருக்கு ஈகோ அதிகம். எனக்கும் ஈகோ இருக்கிறது ஆனால் மேனேஜ் செய்துகொள்வேன். பொறுக்கி என்பது நான் கோபத்தில் சொன்ன வார்த்தை அது ட்ரோல் செய்யப்படுகிறது அதை தவிர்த்துவிடலாம் என்று மிஷ்கின் உருக்கமாக பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X