செருப்புக்கு நடுவே படுத்திருந்த பாலா.. தாங்கமுடியாத வலியால் சரக்கடித்தோம்.. மிஷ்கின் உருக்கம்!

சென்னை: இயக்குநர் பாலா தனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையும், வணங்கான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் இணைந்து சென்னை நந்தம்பாக்கத்தில் 'பாலா 25' விழா நடைபெற்று வருகிறது. இதில் பேசிய மிஸ்கின் பாலா குறித்தும், இருவருக்கும் இடையேயான நட்பு குறித்தும் உருக்கமாக பேசினார்.

அதில், இந்த நாள் எனக்கும் சினிமாவிற்கும், பாலா என்ற கலைஞனை நேசிக்கும் ஒவ்வொரு கலைஞனுக்கும் முக்கியமான நாள். நான் சினிமாவிற்கு வந்த புதிதில் சினிமாவை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. சினிமாவை பற்றி ஒவ்வொரும் பேசும் போது தான் அது பற்றி தெரியும் அப்படி ராஜிவ் மேனன் சொன்ன ஒருவிஷயம் தான் சினிமா என்றால் என்ன என புரியவைத்தது.

bala 25 vanangaan mysskin

30 செருப்புக்கு நடுவே: ராஜிவ் மேனன் சார் ஒரு ஸ்டூடியோவுக்குப் போயிருந்தார், அங்கு 30 செருப்புகள் வெளியில் இருந்தன, அந்த செருப்புக்கு நடுவுல ஒருவர் படுத்திருக்கார். அவர், யார் என்று அங்கு இருப்பவர்களிடம் கேட்டுள்ளார். அவர், ஒரு படத்தின் இயக்குநர் என்று சொல்லி இருக்கிறார்கள். ஒரு படத்தின் இயக்குநர் ஏன் செருப்புக்கு நடுவில் படுத்து இருக்கிறார் என்று கேட்டுள்ளார். அந்த செருப்பு நடுவில் படுத்திருந்தது 'சேது' என்ற மிகப்பெரிய காவியத்தை கொடுத்த பாலா தான். அந்த விஷயத்தை நான், என்னைக்கும் மறக்கவே மாட்டேன் ஒரு கலைஞன் தன் படைப்புக்காக எது வேண்டுமானாலும் செய்வான்.

சரக்கு அடிக்கலாமா: ஓணாவும் ஆட்டுக்குட்டியும் படத்தை பார்த்துவிட்டு, பாலா எனக்கு போன் செய்து என்னை அழைத்தார். அப்போது என்னை பார்த்து அழுதார். பாலா அழுது நான் பார்த்ததே இல்லை. குடிக்கலாமா என்று கேட்டார் நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து குடித்தோம். அப்போது, எனக்கு ஒரு படம் பண்றியா? என்று கேட்டார். அப்படி நான் எடுத்த படம் தான் பிசாசு. நான் கீழே விழுந்த நேரத்தில் என் கையைப் பிடித்து மேலே, இழுத்து படத்தைக் கொடுத்து எனக்கு மீண்டும் வாழ்க்கை கொடுத்தது பாலா. என் வாழ்க்கை முழுவதும் நான் பாலாவிற்கு கடமை பட்டு இருக்கிறேன்.

இறப்பே கிடையாது: பாலாவை பலர் மோசமானவர், பயங்கரமாக திட்டுவார், அடிப்பார் என்று விமர்சனம் செய்வார்கள். என்றோ ஒரு நாள் அவர் திட்டியதை மனதில் வைத்துக்கொண்டு அவர்கள் பேசி வருகிறார்கள். ஆனால், இதையெல்லாம் மீறி பாலா ஒரு உன்னதமான கலைஞன். உண்மையில் பாலாவின் இதயம் தசைகளால் உருவாக்கப்பட்டது இல்லை. கண்ணாடிகளால் உருவாக்கப்பட்டது. எப்படியும் 100 வருடத்திற்குள் அனைவரும் இறந்து விடுவோம். ஆனால், பாலா, இளையராஜா போன்ற கலைஞர்களுக்கு இறப்பே இல்லை, மனிதர்களுக்குத்தான் இறப்பு, இவர்கள் வாழ் நாள் முழுவதும் வாழ்ந்துக்கொண்டே இருப்பார்கள்.

பெருமை அடைகிறேன் : சுரேஷ் காமாட்சி பாலாவுக்கு 25வது வருடம்னு சொன்னதும் அதை பெரிய விழாவாக கொண்டாட வேண்டும் என்று சொன்னேன். ஒரு தாய் ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறாள். ஒரு கலைஞன், தன்னுடன் பயணிக்கும் ஒவ்வொரு கலைஞனையும் பெற்றெடுப்பான். பாலா என்னை பெற்றெடுத்தான் இதை சொல்வதில் நான் பெருமைப்படுகிறேன் என்று மிஸ்கின் பேசி இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X