நடிகை பூர்ணா வயிற்றில் குழந்தையாக பிறக்க வேண்டும்..இயக்குநர் மிஸ்கின் விபரீத விருப்பம்!
சென்னை: இயக்குநர், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட இயக்குநர்களில் ஒருவரான மிஷ்கின் டெவில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படம் பிப்ரவரி 2ந் தேதி வெளியாக உள்ள நிலையில், பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய மிஸ்கின், நடிகை பூர்ணா என் வாழ்க்கையில் முக்கியமான பெண், அவர் வயிற்றில் குழந்தையாக பிறக்க வேண்டும் என்றார்.
இயக்குநர் மிஷ்கின்: இப்படம் பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இத்திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் மிஷ்கின், ஆதித்யா, விதார்த், பூர்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது, விஜய் சேதுபதியை வைத்து ட்ரெயின் படத்தை இயக்கி வருகிறேன். 25 ஆண்டுக்கால திரை வாழ்வில் விஜய் சேதுபதி போன்ற அசாதாரணமான நடிகரைப் பார்த்ததில்லை. ஒவ்வொரு நாளும் நடிப்பில் தன்னை மெருகேற்றிக்கொண்டே இருக்கிறார்.

இயக்குநர் மிஷ்கின்: இப்படம் பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இத்திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் மிஷ்கின், ஆதித்யா, விதார்த், பூர்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது, விஜய் சேதுபதியை வைத்து ட்ரெயின் படத்தை இயக்கி வருகிறேன். 25 ஆண்டுக்கால திரை வாழ்வில் விஜய் சேதுபதி போன்ற அசாதாரணமான நடிகரைப் பார்த்ததில்லை. ஒவ்வொரு நாளும் நடிப்பில் தன்னை மெருகேற்றிக்கொண்டே இருக்கிறது.
நான் வெட்கப்பட்டேன்: மேலும், சில செய்திகளில் நான் என் தம்பியை தூக்கிப் பிடிப்பதாக எழுதி இருந்தார்கள். அந்தச் செய்தியைப் படித்து நான் வெட்கப்பட்டேன். உதவி இயக்குநராகச் சேர வேண்டும் என்று கேட்ட என் தம்பியைப் பார்த்து செருப்பைத் தூக்கி எறிந்தவன் நான். பார்த்திபன் சாரிடம் பணியாற்றிவிட்டு வந்த பின்னர் தான் நான் அவனை உதவி இயக்குநராகச் சேர்த்துக் கொண்டேன்.
குழந்தையாக பிறக்க வேண்டும்: தொடர்ந்து பேசிய மிஸ்கின், பூர்ணா என் வாழ்க்கையில் மிக முக்கியமான பெண். அவள் வயிற்றில் நான் குழந்தையாகப் பிறக்க விரும்புகிறேன். என்னை ஒரு தாய் போல் அவள் பார்த்துக் கொள்வாள். என் குழந்தையை விட அவள் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். அவள் சாகும் வரைக்கும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். மற்ற படங்களில் அவள் நடிப்பாளா என்று தெரியாது. என் படங்களில் எப்போதும் பூர்ணா இருப்பாள் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











