விஜய்க்கு ஏன் அப்படி ஒரு முத்தம்.. இயக்குநர் மிஷ்கின் விளக்கம்.. என்ன சொல்லிருக்கார் தெரியுமா?
சென்னை: Mysskin (மிஷ்கின்) லியோ சக்சஸ் மீட்டில் விஜய்க்கு முத்தம் கொடுத்தது தொடர்பாக மிஷ்கின் விளக்கமளித்திருக்கிறார்.
சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மிஷ்கின் தொடர்ந்து தனது வித்தியாசமான படங்களால் கவனம் ஈர்த்தவர். இயக்கம் மட்டுமின்றி இப்போது நடிகராகவும் அவதாரம் எடுத்திருந்தார். லியோ படத்தில்கூட நடித்திருந்தார். அதேபோல் அவர் அடுத்ததாக இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியிருக்கிறார். அவரது சகோதரர் ஆதித்யா இயக்கும் படமான டெவில் படத்தில்தான் மிஷ்கி இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

டெவில் விழா: இந்த சூழலில் அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நடந்தது. அதை முடித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய மிஷ்கின், ”என்னை அனைவருமே நான் பணிவில்லாதவன் என்றுதான் சொல்வார்கள். இப்போது நான் பணிவுடன் இருக்கிறேன் என்று சொல்லியிருப்பது உண்மையிலேயே எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது.
யூத்: என்னுடைய கரியர் தொடங்கியது யூத் படத்திலிருந்துதான். அப்போது என் தம்பி விஜய் என்னை ஒரு அண்ணன்போல் பார்த்துக்கொண்டார். இன்றும் அப்படித்தான் இருக்கிறார். மகா கலைஞன் நல்ல மனிதன். அப்படிப்பட்ட ஒரு மனிதனுக்கு கையை பிடித்து தலைவணங்கிதான் முத்தத்தை கொடுக்க வேண்டும். அவர் நிச்சயம் ஒரு மகா கலைஞனே.
லெஜண்ட்: என் தம்பிக்கு நான் பணிவுடன் முத்தம் கொடுத்தது எனக்கு சந்தோஷம்தான். நான் அந்த விழாவில் சொல்லியது போல் விஜய் கண்டிப்பாக பெரிய லெஜண்ட்தான். அந்த லெஜண்டுக்கு நான் முத்தம் கொடுத்தது அவ்வளவு விமர்சனத்துக்குரிய ஒன்றா என்று தெரியவில்லை. எனது மனதிலிருந்துதான் எல்லாவற்றையும் செய்வேன். அறிவிலிருந்து எதையும் செய்யமாட்டேன். அறிவிலிருந்து சினிமா மட்டும்தான் எடுக்க முடியும்.” என்றார்.
லியோ வெற்றி விழா: முன்னதாக சில நாட்களுக்கு முன்பு விஜய் நடித்திருந்த லியோ படத்தின் சக்சஸ் மீட் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட விஜய் மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்ட லெஜண்டை போல் விஜய்யும் ஒரு லெஜண்ட்தான் என கூறியிருந்தார். அதுமட்டுமின்றி பணிவுடன் குனிந்து விஜய்யின் கையில் முத்தம் கொடுத்தார். இந்த இரண்டு விஷயங்களையும் பலரும் விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











