Leo - இதுதான் லியோ படம் - மிஷ்கின் வெளியிட்ட அடுத்த அப்டேட்

சென்னை: Leo (லியோ) லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படம் குறித்து இயக்குநர் மிஷ்கின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார்.

விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிவருகிறார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விஜய் - லோகேஷ் இணைந்திருப்பதாலும், விக்ரம் படத்தின் மெகா ப்ளாக் பஸ்டருக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படம் என்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பன்மடக்கு அதிகரித்திருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படம் அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

Director Mysskin Talks about Leo Movie

பாராட்டை பெற்ற படக்குழு: லியோ படத்தின் ஷூட்டிங் இரண்டு மாதங்களாக காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்தது. அங்கு விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்டோர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. காஷ்மீரில் நடந்த ஷூட்டிங் தொடர்பாக லியோ படக்குழு வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தது. அந்த வீடியோ வழக்கமான மேக்கிங் வீடியோவாக இல்லாமல், படத்தில் பணியாற்றிய கடைநிலை ஊழியர்கள் சம்பந்தமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது ஒட்டுமொத்த கோலிவுட்டிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

சென்னையில் ஷூட்டிங்: காஷ்மீர் ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னை திரும்பிய படக்குழு குட்டி ரெஸ்ட் எடுத்தது. அதனையடுத்து சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் செட் போட்டு சில வாரங்கள் மும்முரமாக படப்பிடிப்பு நடந்தது. அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது சென்னை பையனூரில் ஷூட்டிங் நடந்துவருவதாகவும், அங்கு ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்படுகின்றன எனவும் கூறப்படுகிறது.

Director Mysskin Talks about Leo Movie

அடுத்தது எங்கு ஷூட்டிங்: பையனூர் ஷெட்யூலை முடித்துவிட்டு லியோ படக்குழு மீண்டும் ஸ்டூடியோவுக்குள் செல்லவிருக்கிறது. அதன்படி ஆதித்ய ராம் ஸ்டூடியோவில் செட் போடும் பணிகள் மும்முரமடைந்துள்ளன. இந்த செட்டில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்ளிட்டோருக்கான காட்சிகள் படமாக்கப்படும் என்ற புதிய தகவலும் சில நாள்களாக உலாவிவருகிறது.

படம் எப்படி இருக்கும்: இந்தச் சூழலில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்களித்த மிஷ்கின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது லியோ படம் குறித்து பேசிய மிஷ்கின், "லியோ படத்துல சின்ன கேரக்டர்தான் நடிச்சிருக்கேன். ஆனால் இன்ட்ரஸ்டிங்கான கேரக்டர். ரொம்ப வருடங்கள் கழித்து விஜய்யுடன் வேலை செய்கிறேன்.

Director Mysskin Talks about Leo Movie

20 வருடங்களில் அவர் மாறவே இல்லை. விஜய் என்னை மிகவும் நன்றாகவே பார்த்துக்கொண்டார். லோகேஷ் கனகராஜ் ரொம்பவே ஸ்வீட்டான பையனாக இருக்கிறார். மிகப்பெரிய ஆக்‌ஷன் படமாக லியோ இருக்கும். அடுத்தப் படம் தாணுவுக்காக செய்கிறேன்" என்றார்.

படத்தில் ஒரு பாடலா?: இதற்கிடையே, லியோ படத்தில் ஒரு பாடலுக்கான ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருப்பதாகவும், அதற்காக மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 2000 டான்ஸர்களை வரவழைக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் கோரியோகிராஃபி செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X