Rajinikanth: இதுதான் ரஜினிகாந்தின் கடைசி படம்.. ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய பிரபல இயக்குநர்!

சென்னை: Rajini - Lokesh Kanagaraj (ரஜினி, லோகேஷ் கனகராஜ்) ரஜினிகாந்த்தும், லோகேஷ் கனகராஜும் இணைந்து படம் செய்வதை இயக்குநர் மிஷ்கின் உறுதி செய்திருக்கிறார்.

இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநர் என்ற அந்தஸ்தில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதுவரை அவர் எடுத்த அத்தனை படங்களும் ஹிட்டாக அவருக்கு இந்த இடம் கிடைத்திருக்கிறது. திரைக்கதையில் செய்யும் மேஜிக், மேக்கிங்கில் காட்டும் வித்தியாசம் என ரவுண்டு கட்டி அடிக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

Director Mysskin Talks about Rajinikanth and Lokesh Kanagaraj Movie

லியோ: விக்ரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்குகிறார். இதில் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இவ்வளவு நடிகர்கள் இருக்கும்போது எல்லோருக்குமான ஸ்க்ரீன் ஸ்பேஸை லோகேஷ் எப்படி கொடுத்திருப்பார் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

Director Mysskin Talks about Rajinikanth and Lokesh Kanagaraj Movie

லியோ கதை என்ன?: லியோ படத்தின் ஷூட்டிங் இப்போது சென்னையில் ஆதித்ய ராம் ஸ்டூடியோவில் நடந்துவருகிறது. இந்தச் சூழலில் படத்தின் கதை குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதாவது, ஒரு சம்பவத்தை செய்துவிட்டு தனது அடையாளத்தை மறைத்து காஷ்மீரில் விஜய் வாழ்வார். அதை சுற்றி நடப்பதுதான் கதை என்று கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் விஜய் டபுள் ஆக்‌ஷனில் நடிக்கிறார் எனவும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

லியோவில் சிங்கம்: அதுமட்டுமின்றி லியோ படத்தில் சிங்கம் ஒன்றுக்கு முக்கியமான ரோல் இருக்கிறது. அதனை சிஜியில் உருவாக்குவதற்கு மட்டும் 15 கோடி ரூபாய் செலவழிக்கப்படவிருக்கிறது என தகவல் வெளியாகி கோலிவுட்டையே ஆச்சரியப்படுத்தியது. அதேபோல் பாடல் ஒன்றுக்காக மொத்தம் 2000 டான்ஸர்களையும் பயன்படுத்தவிருக்கிறார்களாம். லியோ படமானது அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்து என்ன?: லியோ படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் அடுத்து என்ன படம் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்தச் சூழலில் கைதி 2 படத்தை இயக்குவது ஏற்கனவே உறுதியானாலும், ரஜினியுடன் இணையவிருக்கிறார் என்பதுதான் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. அதுதான் ரஜினிக்கு கடைசி படமாக இருக்கலாம் எனவும் சிலர் கூறினர். இதனையடுத்து ரஜினியும், லோகேஷும் இணையும் படத்தை தயாரிப்பதற்கு பல தயாரிப்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டிருக்கின்றனர். பெரும்பாலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

Director Mysskin Talks about Rajinikanth and Lokesh Kanagaraj Movie

ரஜினி - லோகேஷ் உறுதி: இந்நிலையில் லியோ படத்தில் நடித்துவரும் மிஷ்கின் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் இணையும் படம் குறித்து பேசியிருக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய அவர், "லோகேஷ் அடுத்தது ரஜினிகாந்துடன் படம் பண்றாரு. இதுதான் ரஜினியின் கடைசி படமா இருக்கும்னு சொல்றாங்க. ஆனா எந்த அளவிற்கு அது உண்மை என்று தெரியவில்லை. அந்த படத்தை லோகேஷ் பண்றது ரொம்ப பெருமையா இருக்கு" என்றார். இதன் மூலம் இருவரும் இணைவது உறுதியாகியிருக்கிறது. இதனால் ரஜினி மற்றும் லோகேஷின் ரசிகர்கள் உற்சாகத்தோடு இருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X