Mysskin - கமல் ஹாசனை இயக்கும் வாய்ப்பு.. வேண்டாம் என்றாரா மிஷ்கின்?..முழு விவரம் உள்ளே
சென்னை: Mysskin (மிஷ்கின்) கமல் ஹாசனை இயக்கும் வாய்ப்பை இயக்குநர் மிஷ்கின் வேண்டாம் என்று சொன்னதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து அவர் இயக்கிய அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பையே பெற்றன.

முகமூடி மிஷ்கின்: மிஷ்கின் மிகவும் எதிர்பார்த்து செய்த படம் முகமூடி. எதார்த்த வாழ்க்கையிலிருந்து ஒரு சூப்பர் ஹீரோ என்ற ஒன்லைனை அடிப்படையாக வைத்து அந்தப் படம் உருவாகியிருந்தது. ஜீவா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மிஷ்கின் பேசிய பேச்சுக்கும், படத்துக்கும் துளிகூட சம்பந்தமே இல்லை என்றும் ரசிகர்கள் வெளிப்படையாகவே விமர்சித்தனர்.
பிசாசு: பேய் படங்கள் என்றாலே திகிலும், படபடப்பும் நிறைந்த காட்சிகள் என்ற டெம்ப்ளேட்டை உடைத்தவர் மிஷ்கின். அவர் இயக்கிய பிசாசு படத்தை பார்க்கும்போது பயம் வருவதற்கு பதிலாக அந்த பேய் மீது இரக்கமும், காதலும் வரும். அந்த அளவுக்கு படத்தை செதுக்கியிருப்பார். தற்போது அவர் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியிருக்கிறார். படமானது விரைவில் வெளியாகவிருக்கிறது.
நடிகர் மிஷ்கின்: இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் கலக்கிவருகிறார் மிஷ்கின். சவரக்கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் விஜய்யுடன் லியோ, சிவகார்த்திகேயனுடன் மாவீரன் ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திய அவர் இனி இயக்கவேமாட்டாரா என்ற சந்தேகத்தை ரசிகர்கள் கிளப்பினர்.
ட்ரெய்ன்: ஆனால் மிஷ்கின் அந்த சந்தேகத்தை போக்கும் விதமாக மீண்டும் படம் இயக்குகிறார். விஜய் சேதுபதியை வைத்து ட்ரெய்ன் என்ற படத்தை இயக்குகிறார் அவர். அதற்கான பூஜை சமீபத்தில்தான் போடப்பட்டது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்நிலையில் கமல் ஹாசனை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை அவர் நிராகரித்ததாக கூறப்படுகிறது.
என்ன நடந்தது?: அதாவது அஞ்சாதே படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதை அடுத்து கமல் ஹாசனிமிருந்து மிஷ்கினுக்கு அழைப்பு வந்திருக்கிறது. அதன்படி மிஷ்கின் ஒரு கதையை சொல்ல அது கமலுக்கும் பிடித்துவிட்டதாம். அந்தக் கதையை இரண்டு பேரும் மெருகேற்றியிருக்கிறார்கள். இருந்தாலும் ஒருகட்டத்தில் அந்தக் கதையை முழுமையாக முடிக்காமல் மிஷ்கின் வெளியேறிவிட்டாராம்.
அந்தக் கதைக்கு பதிலாக வேறு கதை சொல்லுங்கள் சேர்ந்து படம் செய்யலாம் என கமல் ஹாசன் சில நாட்களுக்கு பிறகு கேட்டாராம். ஆனால் இந்த முறை மிஷ்கின் திட்டவட்டமாக மறுத்துவிட்டாராம்.அதற்கு காரணம் கமலின் ஓவர் தலையீடுதான் என்று கூறப்படுகிறது. எப்போதும் கமல் ஹாசன் தனக்கு வரும் கதைகளில் தலையிட்டு சில மாற்றங்களை சொல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











