Leo :விஜய்யும் லோகேஷும் சேர்ந்தா அந்த சம்பவம் இல்லாம இருக்குமா.. மிஷ்கின் ஓபன் அப்!

சென்னை : நடிகர்கள் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் லியோ படம் மிகவும் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

இந்தப் படத்தின் காஷ்மீர் சூட்டிங் 50 நாட்களை கடந்து நடைபெற்ற நிலையில், அடுத்ததாக சென்னையில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் துவங்கவுள்ளது.

வரும் 5ம் தேதி படத்தின் சென்னை சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் தொடர்ந்து ஒரு மாதகாலம் சூட்டிங் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Director Mysskin updates about Vijays Leo movie and action sequences of the movie

லியோ படத்தின் ஆக்ஷன் காட்சிகள் குறித்து பேசிய மிஷ்கின் : நடிகர்கள் விஜய் மற்றும் த்ரிஷா உள்ளிட்டவர்கள் 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள படம் லியோ. இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த பிப்ரவரி மாதத்தில் துவங்கப்பட்டு காஷ்மீரில் தொடர்ந்து 50 நாட்களை கடந்து சூட்டிங் நடைபெற்றது. இந்தப் படத்தில் விஜய், த்ரிஷாவை தொடர்ந்து மிஷ்கின், சஞ்சய் தத், கௌதம் மேனன், அர்ஜுன், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர். படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் -விஜய் கூட்டணியில் இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் விஜய்யுடன் 6 வில்லன்கள் மோதவுள்ளதாக முன்னதாக அப்டேட் தெரிவிக்கப்பட்டது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகவும் அதிகமாக காணப்படுகிறது. விக்ரம் படத்தை போலவே இந்தப் படத்திலும் அதிகமான நட்சத்திரப்பட்டாளம் காணப்படுகிறது. படத்தில் சமீபத்திய வரவாக விக்ரம் படத்தில் நடித்திருந்த ஜாபர் சாதிக் இடம்பெற்றுள்ளார். இதனால் படம் கண்டிப்பாக எல்சியூவில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் இயக்குநர் மிஷ்கின் நடித்துள்ளார். காஷ்மீரில் விஜய்யுடன் அவருக்கு காம்பினேஷன் காட்சிகள் காணப்பட்டன. தொடர்ந்து அவர் தனது சூட்டிங்கை காஷ்மீரில் முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். அவர் அதை சமூக வலைதளங்களில் அப்டேட்டும் செய்தார். இந்நிலையில் தற்போது மீடியாவிடம் அவர் பேட்டி கொடுத்துள்ளார். அதில் லியோ படம் குறித்து பேசிய அவர், படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Director Mysskin updates about Vijays Leo movie and action sequences of the movie

சிறிய கேரக்டரில்தான் தான் நடித்துள்ளதாகவும் ஆனால் மிகவும் சிறப்பான கேரக்டர் என்று தெரிவித்துள்ள மிஷ்கின், நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தான் விஜய்யுடன் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகள் கழிந்தும் விஜய்யின் அன்பு மாறவே இல்லை என்று தெரிவித்துள்ளார். இதேபோல லோகேஷ் கனகராஜ் மிகவும் மேன்மையானவர் என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே லோகேஷ் மற்றும் விஜய் இணைந்தால் அதில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்கு குறைவே இருக்காது என்றும் இந்தப் படமும் மிகவும் சுவாரஸ்யமான படம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விஜய்யின் 67வது படமான இந்தப் படம் அக்டோபர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்ட பின்பே படத்தின் சூட்டிங்கை லோகேஷ் துவக்கினார். முன்னதாக மாஸ்டர் படத்தை மிகவும் சிறப்பான வகையில் கொடுத்திருந்தார் லோகேஷ். இந்தப் படத்தில் வித்தியாசமான விஜய்யை ரசிகர்களுக்கு காட்டியிருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடித்து வருவதால் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X