இசையமைப்பாளராக அறிமுகமாகும் பிசாசு பட இயக்குநர்... விரைவில் அறிவிப்பு

சென்னை : பிசாசு உள்ளிட்ட படங்களின் மூலம் சிறப்பாக இயக்குநராக அறியப்படுபவர் இயக்குநர் மிஷ்கின்.

Recommended Video

Vishal பத்தி இனிமே பேசவே மாட்டேன் | Mysskin Controversy speech about Vishal

இவர் தற்போது ஆன்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இசையமைப்பாளராகவும் இவர் அறிமுகமாகவுள்ளார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின் தன்னுடைய மாறுப்பட்ட கதைக்களங்களின்மூலம் சிறப்பான இயக்குநராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். பிசாசு, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களின் மூலம் இவர் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். தொடர்ந்து தற்போது பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துள்ளார்.

பிசாசு 2 படம்

பிசாசு 2 படம்

ஆன்ட்ரியா, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகவுள்ள படம் பிசாசு 2. இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி வெகுவான வரவேற்பை பெற்றுள்ளன. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

சிறப்பான பிசாசு படம்

சிறப்பான பிசாசு படம்

பிசாசு படம் சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்தப் படமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் படம் ரிலீசாக உள்ள நிலையில், அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

இசையில் கவனம்

இசையில் கவனம்

தன்னுடைய படங்களில் பாடல்கள் மற்றும் இசையமைப்பை சிறப்பாக இருக்கும்படி பார்த்துக் கொள்பவர் மிஷ்கின். பிசாசு படத்தில் நதிபோகும் கூழாங்கல் பயணம் பாடலும் இசையமைப்பும் அனைவரையும் வருடியது நினைவிருக்கலாம்.

விரைவில் இசையமைப்பாளராகிறார்

விரைவில் இசையமைப்பாளராகிறார்

இந்நிலையில் தன்னுடைய இசைஞானத்தை படத்திலும் கொண்டுவரும் வகையில் விரைவில் இசையமைப்பாளராக உருவெடுக்க உள்ளார் மிஷ்கின். தன்னுடைய தம்பி ஜிஆர் ஆதித்யா இயக்கும் புதிய படத்திற்கு இவர் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

தன்னுடைய மாறுபட்ட கதைக்களங்களின்மூலம் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளான மிஷ்கின் தற்போது இசையமைப்பின்மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளார் என்பது அவரது ரசிகர்களுக்கு மிகவும் சிறப்பான செய்தியாக பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X