twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எப்படிலாம் யோசிக்கிறாய்ங்க.. தியேட்டரில் கூட்டம் சேர்க்க பீர் விற்கலாம்ல.. பிரபல இயக்குனர் ஐடியா!

    By
    |

    சென்னை: தியேட்டர்களில் கூட்டம் சேர்ப்பதற்கு பீர், ஓயின் விற்கலாம் என்று ஐடியா கொடுத்திருக்கிறார் பிரபல இயக்குனர்.

    கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

    இந்த வைரஸ் பாதிப்புக்கு இதுவரை இரண்டாயிரத்து எண்ணூறுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

    அதை மறைக்க ஆடை எதற்கு.. இதுவே போதும்.. வைரலாகும் சர்ச்சை நடிகையின் நிர்வாண வீடியோ!அதை மறைக்க ஆடை எதற்கு.. இதுவே போதும்.. வைரலாகும் சர்ச்சை நடிகையின் நிர்வாண வீடியோ!

    படப்பிடிப்பு

    படப்பிடிப்பு

    இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. கொரோனாவுக்காக பிறப்பிக்கப்பட்ட லாக்டவுனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. படப்பிடிப்புகள் இல்லாததால், நடிகர், நடிகைகளும் வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளனர்.

    கூட்டம் வருமா?

    கூட்டம் வருமா?

    சினிமா போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை. மூடப்பட்டுள்ள தியேட்டர்களைத் திறக்க இன்னும் மூன்று, நான்கு மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. அப்படியே திறந்தாலும் தியேட்டர்களுக்கு கூட்டம் வருமா என்பது சந்தேகமாக உள்ளது.

    நடிகையர் திலகம்

    நடிகையர் திலகம்

    இந்நிலையில், லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக வருவதற்கு ஐடியா கொடுத்திருக்கிறார் இயக்குனர் நாக் அஸ்வின். இவர் கீர்த்தி சுரேஷ், சமந்தா, விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான் நடித்த நடிகையர் திலகம் படத்தை இயக்கியவர். அடுத்து பிரபாஸ் 21 படத்தை இயக்க இருக்கிறார்.

    மதுவிற்பனை

    மதுவிற்பனை

    இயக்குனர் நாக் அஸ்வின், தனது சமூக வலைத்தளத்தில், தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் அதிக கூட்டம் வர பீர், ஒயின் போன்றவற்றை விற்கலாம் என்று ஐடியா கூறியுள்ளார். ஒருமுறை ராணாவிடமும் அவர் தந்தையும் தயாரிப்பாளருமான சுரேஷ் பாபுவிடமும் பேசிக்கொண்டிருக்கும் போது, வெளிநாடுகளை போல நம்மூர் தியேட்டர்களிலும் பீர், ஒயின் போன்ற மதுவிற்பனை செய்தால், தியேட்டர் பிசினஸை அதிகரிக்க முடியுமா? என்று கேட்டேன்.

    ஃபேமிலி ஆடியன்ஸ்

    ஃபேமிலி ஆடியன்ஸ்

    நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், இது சரியா தவறா? என்று கேட்டிருந்தார். இதற்கு பலர் இதனால், ஃபேமிலி ஆடியன்ஸ் வரத் தயங்குவார்களே என்று கூறினர். 'அது உண்மைதான். சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இதை செய்து பார்க்கலாம். மக்கள் தியேட்டர்களுக்கு திரும்ப என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள் என்று வாசகர்களிடம் கேள்வி கேட்டுள்ளனர்.

    ரணகளமாகி விடும்

    ரணகளமாகி விடும்

    சிலர், ஒரு கூல்ட்ரிங்ஸையே 200 ரூபாய்க்கு விற்பவர்கள், இதை, எவ்வளவு ரூபாய்க்கு விற்பார்கள்? என்று கேட்டுள்ளனர். சிலர் இதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டையும் நம் நாட்டையும் ஒப்பிடாதீர்கள். இங்கு நம் ஆட்கள் தண்ணியடித்தால் ரணகளமாக்கி விடுவார்கள் என சிலர் கூற, சிலர் வரவேற்றுள்ளனர்.

    English summary
    Nadigaiyar thilagam director Nag ashwin gives this idea to improve theatre business
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X